விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவி ஜுவாலா குட்டாவின் முதல் கணவர் இவர்தான்.. வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா என்பவரை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷ்ணு விஷால் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. உருகி உருகி காதலித்த தனது மனைவி ரஜினி என்பவரை சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.

அதேபோல் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவும் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்தானவர் தான். சேத்தன் ஆனந்த் என்பவரை 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர் ஜுவாலா குட்டா. அதன்பிறகு இருவரும் 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

jwala-gutta-chettan-anand-couple
jwala-gutta-chettan-anand-couple

விஷ்ணு விஷால் சொந்தமாக படம் தயாரித்து பல பிரச்சனைகளில் சிக்கிய போது அவருக்கு ஜுவாலா குட்டா நிறைய உதவி செய்ததாகவும் அதன் மூலமாக இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த வதந்திக்கு இருவரும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை, அதேசமயம் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகவே அது உண்மை என்பது போன்று ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

vishnu-vishal-ex-wife-rajini
vishnu-vishal-ex-wife-rajini

அதுமட்டுமில்லாமல் ஜுவாலா குட்டாவின் மீது ஏற்பட்ட காதல் காரணமாகத்தான் விஷ்ணு விஷால் தன்னுடைய முதல் மனைவியை வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்தார் எனவும் செய்திகள் வெளியானது.

vishnu-vishal-jwala-gutta
vishnu-vishal-jwala-gutta
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்