குடித்துவிட்டு ரகளை செய்யும் விஷ்ணு விஷால் வீடியோ.. பெயரை கெடுப்பதற்கு சதியா.?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய ஒரு நடிகர் விஷ்ணு விஷால். ஆரம்ப காலத்தில் இவரது படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் இருந்தாலும், முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் ராட்சசன் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய ஒரு நடிகராக பிரபலமானார்.

தற்போது இவரது நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் காடன் மற்றும் ஆரண்யா எனும் படங்கள் உருவாகி வருகின்றன. தமிழில் எஃப் ஐ ஆர் மற்றும் ஜெகஜால கில்லாடி எனும் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணு விஷால் தான் குடியிருக்கும் அடுக்குமாடி வீட்டில் மது அருந்திவிட்டு அருகாமையில் குடியிருப்பவர்கள்ளிடம் ரகளையில் ஈடுபட்டு வருவதாக அதே குடியிருப்பில் வசிக்கும் ரங்க பாபு எனும் நபர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இதனால் விரைந்து வந்த போலீசார் விஷ்ணு விஷால் மற்றும் ரங்க பாபுவிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vishnu vishal
vishnu vishal

ஆனால் விஷ்ணு விஷால் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் நான் நாள்தோறும் மது அருந்தினால் எப்படி என்னால் சிக்ஸ்பேக் வைத்து இருக்க முடியும் என்றும் அடிப்படையான விஷயங்கள் கூட தெரிந்து கொள்ளாமல் சிலர் இருப்பதாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்