முடிவில்லாமல் போகும் லைக்கா, விஷால் பஞ்சாயத்து.. நம்பி இருந்த ஒரே படத்துக்கு வந்த சிக்கல்

Vishal : விஷால் எதைத் தொட்டாலுமே பிரச்சனையில் தான் முடிகிறது. ஆரம்பத்தில் மிஸ்கினுடன் விஷாலுக்கு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி வருகிறார்.

இதைத்தொடர்ந்து லைக்காவுக்கும் விஷாலுக்கும் ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. அதாவது சினிமா துறையில் பிரபலமான பைனான்சியர் மதுரை அன்புவிடம் விஷால் 20 கோடி வாங்கி இருக்கிறார்.

அதற்கான வட்டியையும் செலுத்தி வந்த நிலையில் முதலை கொடுக்க முடியாமல் இழுத்து அடித்து வந்துள்ளார். அவருடைய படங்களும் போகாத காரணத்தினால் பட வாய்ப்பு குறைய தொடங்கியது.

லைக்காவுடன் விஷாலுக்கு ஏற்பட்ட பிரச்சனை

இந்நிலையில் மதுரை அன்பு லைக்கா நிறுவனத்திடம் 20 கோடியை வாங்கிக்கொண்டு விஷால் வைத்து படம் எடுங்கள் என்று சொல்லிவிட்டாராம். ஆனால் விஷால் கால்ஷீட் கொடுக்காமல் லைக்காவை இழுத்து அடித்துள்ளார்.

மேலும் கிட்டதட்ட இரண்டு, மூன்று வருடங்கள் ஆகியும் கால்ஷீட் கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார் விஷால். இந்நிலையில் விஷாலின் சமீபத்திய படங்கள் பிரச்சனையுடன் தான் வெளியாகி வருகிறது.

இப்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது ரத்னம் படத்தின் ரிலீசில் பிரச்சனை செய்யப் போகிறார்களாம்.

விஷால் ரத்னம் படத்தை மட்டும் தான் பெரிதும் நம்பி இருந்தார். சூர்யாவுக்கு சிங்கம், அருண் விஜய்க்கு யானை என்று ஹரி ஹிட் படம் கொடுத்து தூக்கி விட்டார். அதேபோல் விஷாலுக்கு யானை படம் அமையும் என எதிர்பார்த்த நிலையில் ரிலீஸ் நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்