ரெட் ஜெயின்ட் சம்பாதித்த பெயரை கெடுக்கும் விஷால்.. நாட்டாமை உதயநிதி தீர்ப்புக்கு வந்த சிக்கல்

Actor Vishal : உதயநிதி, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது இந்த ஊர், உலகமே அறிந்த ஒன்று தான். விஷால் பல தடவை சிக்கலில் மாட்டிய போது அவரது நண்பனாக உதயநிதி உதவி செய்து இருக்கிறார்.

இப்போது தனது நண்பனுக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் உதயநிதி கூறிய செய்திதான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் ரத்னம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரத்னம் படத்திற்கு போட்டியாக சுந்தர் சியின் அரண்மனை 4 ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அரண்மனை 4 படத்தை ரெட் ஜெயின்ட் தான் விநியோகம் செய்து வருகிறது.

உதயநிதி மீது விஷால் வைத்த குற்றச்சாட்டு

ஒரு விநியோகஸ்தராக உதயநிதிக்கு நிறுவனத்திற்கு நல்ல பெயர் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் தயாரிப்பாளர்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில் உதயநிதி வந்தபிறகு கணக்கு வழக்கு சரியாக இருப்பதாக கூறப்பட்டது.

மேலும் திரையரங்கு உரிமையாளர்களும் சரியாக கணக்கு காண்பித்து வந்தனர். இப்போது விஷால் கூறியிருப்பது ரெட் ஜெயின்ட் படம் வந்தால் தியேட்டர் கிடைப்பதில்லை என்று கூறியிருக்கிறார்.

நம்ம படங்களை லேட்டாக ரிலீஸ் செய்ய சொல்கின்றனர் என்கின்றார். மேலும் அரண்மனை 4 படத்தை உதயநிதி விநியோகம் செய்வதால் ரத்னம் படத்திற்கு தியேட்டர் தருவார்களா என்று இப்பொழுது புலம்பி வருகிறாராம் விஷால்.

இவர் இப்படி கூறியது ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மற்ற படங்களுக்கு உதயநிதி தியேட்டர் தருவதில்லை என்ற தோனியில் விஷால் கூறிக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்