தொடர்ந்து மக்களை புண்ணாக்கும் விஷால்.. எப்பா சாமி! கொஞ்சம் ஆறுதலாய் வீரமே வாகை சூடும்

ஆக்சன், அயோக்கியா, சக்ரா போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது விஷாலின் வீரமே வாகை சூடும் படம் எவ்வளவோ பரவாயில்லை.

விஷால் சமீபகாலமாக மக்கள் ரசிக்கும் படி ஒரு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று பல இயக்குனர்களை நாடியுள்ளார். ஆனால் அவரால் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

தற்போது நல்லதொரு சஸ்பென்ஸ் படத்தை கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் டைரக்டர், பா சரவணன். அதுவும் விஷால் தயாரிப்பிலேயே இந்தப்படம் ஆரம்பத்திலிருந்தே மக்களை சீட்டின் நுனியில் அமரும்படி செய்கிறது.

இடைவெளியில் கொஞ்சம் பிசிறு தட்டினாலும் ரசிகர்களின், எதிர்பார்ப்பிற்கு பஞ்சமில்லாமல் திரைக்கதை நகர்கிறது. அதனால் விஷாலுக்கு இது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு படமாக அமையாவிட்டாலும் வசூல் ரீதியாக நல்லதொரு லாபத்தை ஈட்டித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை தயாரித்திருப்பது விஷாலின் ஃபிலிம் புரோடக்சன் தான். இது விஷாலின் அடுத்த படத்திற்கு ஒரு அடித்தளமாய் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனிமி போன்ற விஷாலின் படங்கள் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு பெறாவிட்டாலும், அவரது சொந்த புரோடக்சன் ஆன “விஷால் பிலிம் பேக்டரி”  தற்போது அவரை கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை