தனக்குத்தானே தலையில் மண்ணை வாரி போட்டும் திருந்தாத அனகோண்டா.. ரஜினி, விஜய்யை வைத்து செய்யும் அரசியல்

Actor Vishal: விஷாலின் ரத்னம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. நேற்று இதன் ட்ரெய்லர் வெளிவந்த நிலையில் தற்போது அவர் பட பிரமோஷனில் பிஸியாக இருக்கிறார்.

அதில் படத்தைப் பற்றி அவர் பேசுகிறாரோ இல்லையோ அரசியலைப் பற்றி வெளுத்து வாங்குகிறார். அதன்படி தற்போது உதயநிதி, விஜய், ரஜினி ஆகியோருக்கு செக் வைக்கும் விதமாக அவர் பேசியுள்ளார்.

அதாவது அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்வி இவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால் நிச்சயம் நான் வருவேன். நான் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

இந்த குடும்பம் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் மாணவர்களுக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுப்பதை நிறுத்தி விடுங்கள். மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

விஷாலின் அரசியல் என்ட்ரி

அதேபோல் நான் வந்தாலும் வருவேன். வரும் நேரத்தில் வருவேன். வரப் போறேன் என்ற பேச்செல்லாம் கிடையாது. நான் கண்டிப்பாக வருவேன்.

இதனால் என் வீட்டுக்கு ரெய்டு வந்தால் கூட கவலைப்பட மாட்டேன். எதற்கும் நான் தயாராக தான் இருக்கிறேன் என்று வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக விஷால் பேசியுள்ளார்.

ஏற்கனவே ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மீது பல புகார்களை இவர் அடுக்கி இருந்தார். தற்போது அரசியலுக்கு வருவேன் என்று கூறி பெரும்புள்ளிகளை எல்லாம் தாக்கி இருக்கிறார்.

அந்த வகையில் விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் விஷாலுக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அவர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்