ஆர்யாவின் வெற்றியை வைத்து விளம்பரம் தேடும் விஷால்.. என்னத்தச் சொல்ல?

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களை தவிர மற்ற எந்த நடிகர்களையும் மாஸ் ஹீரோக்களாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இது புரியாமல் மாஸ் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து சினிமாவை விட்டு காணாமல் போனவர்கள் சம்பவம் நிறைய உள்ளது.

அந்த வகையில் ஆரம்பத்தில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ஆர்யா திடீரென மாஸ் ஹீரோவாக ஆசைப்பட்டு தன்னுடைய மார்க்கெட்டை மொத்தமும் இழந்து தவித்தார் என்பது கோலிவுட்டுக்கே தெரிந்த செய்திதான்.

தன்னுடைய பிளஸ் என்ன என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் மற்ற நடிகர்களின் படங்களில் ஒன்றுமில்லாத கேரக்டர்களில் நடித்து வந்தார். இந்த நேரத்தில் தான் அவருக்கு கைகொடுக்கும் விதமாக மகாமுனி என்ற திரைப்படம் அமைந்தது.

அந்த படம் வசூல் ரீதியாக ஆகா, ஓகோ என்று செல்லவில்லை என்றாலும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுகள் கிடைத்தன. அதைத்தொடர்ந்து ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான டெடி திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக குழந்தைகள் மத்தியில் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த இரண்டு படங்களில் வரவேற்பை தொடர்ந்து சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஆர்யா இழந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

இப்படி ஆர்யாவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் வரவேற்பு கிடைக்கும் இந்த நேரத்தில் விஷால் தன்னுடைய படத்தையும் பிரபலப்படுத்திக் கொள்ளலாம் என ஆர்யா வில்லனாக நடித்து விஷால் ஹீரோவாக நடித்துள்ள எனிமி படத்தின் டீசரை வெளியிட உள்ளார். விஷால் கடந்த சில வருடங்களாக மார்க்கெட் இல்லாமல் தவித்து வருகிறார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

enemy-teaser
enemy-teaser

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -