விஷால் செய்த செயலால் அப்செட்டான படக்குழு.. கூட நடிக்கும் நடிகர் பார்த்தாவது திருந்த வில்லையா!

பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளி பிறகு மீண்டும் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் படம் எனிமி. ஆனந்த ஷங்கர் இயக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இருவரும் இணையும் படம் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் கடைசிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. படத்தில் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை ஏற்கனவே ஆர்யா நடித்துக் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

தற்போது விஷால் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக விஷால் படப்பிடிப்பு தளத்துக்கு வரவே இல்லையாம். இது ஏனென்று தெரியாமல் படக்குழுவினர் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

vishal-01
vishal-01

சமீபகாலமாக விஷால் மீது இது போன்று அடுக்கடுக்கான புகார்கள் வெளிவருகின்றன. அதேபோல் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்களில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதே நிலை தொடர்ந்தால் விரைவில் விஷாலின் மார்க்கெட் சரிந்து விடவும் வாய்ப்புள்ளது.

- Advertisement -