ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

3 ஜாம்பவான்களுடன் கைகோர்த்த விஷால்.. வைரல் புகைப்படத்துடன் கொடுத்த துப்பறிவாளன் 2 அப்டேட்

Vishal-Thupparivalan 2: விஷால் இப்போது ஏக போக குஷியில் இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அவர் இப்போது துப்பறிவாளன் 2 படத்தின் அப்டேட்டையும் நாசுக்காக கொடுத்துள்ளார். அத்துடன் சேர்ந்து அவர் வெளியிட்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.

அதாவது அவர் இப்போது ஹரியுடன் கூட்டணி அமைத்துள்ள விஷால் 34 படத்தின் ஷூட்டிங் ஜோராக நடந்து வருகிறது. அப்படத்தில் கௌதம் மேனன் மற்றும் சமுத்திரகனி இருவரும் தற்போது இணைந்துள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக ஹரி, விஷால் ஆகியோருடன் இருவரும் இருக்கும் போட்டோ வெளியாகி உள்ளது.

அதை வெளியிட்டுள்ள விஷால் மூன்று இயக்குனர்களுடன் இருக்கும் இந்த அரிய புகைப்படம் பத்திரமாக பாதுகாக்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால் இதே போட்டோவை நான் அடுத்த வருடம் சிறு மாற்றத்துடன் வெளியிடுவேன். அதில் மூன்று இயக்குனர்கள் என்பதற்கு பதிலாக நான்கு என்று இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து துப்பறிவாளன் 2 அடுத்த வருடம் வரும் என்ற அப்டேட்டையும் அவர் கொடுத்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இப்படம் அறிவிக்கப்பட்டது. இளையராஜா இசையில் நாசர், ரகுமான், கௌதமி உள்ளிட்ட பலர் இதில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

குறித்த நேரத்தில் படப்பிடிப்பும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் விஷாலுக்கும் இயக்குனருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர் விலகிய நிலையில் விஷாலே படத்தை இயக்குவார் என்றும் அறிவித்தனர். ஆனால் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக இன்னும் இப்படம் தூசி தட்டப்படாமல் இருக்கிறது.

இதற்கு இடையில் விஷாலும் லைக்காவுடனான பிரச்சனையால் அல்லாடி வந்தார். இந்நிலையில் அவர் இப்படத்தை மீண்டும் தொடங்க இருப்பது ஒரு ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே நடிகர், தயாரிப்பாளர் என கலக்கி வரும் விஷால் இயக்குனராக ஜெயிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

3 ஜாம்பவான்களுடன் கைகோர்த்த விஷால்

vishal-hari-samuthrakani
vishal-hari-samuthrakani
- Advertisement -

Trending News