11 தங்கைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்த விஷால்.. அம்பலமான சீக்ரெட்டால் காற்றில் பறக்கும் மானம்

சினிமா துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஷால் நேற்று 11 ஏழை ஜோடிகளுக்கு விமரிசையாக திருமணம் செய்து வைத்தார். 40 வயதை கடந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிகர் சங்க கட்டிடம் முடிவடைந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் அவர் தன்னுடைய நற்பணி மன்றத்தின் சார்பாக இந்த இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். அது மட்டுமல்லாமல் அந்த ஜோடிகளுக்கு சீர்வரிசையும் கொடுக்கப்பட்டது. நேற்று நடந்த இந்த திருமணம்தான் சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டது. மேலும் விஷால் இந்த திருமணம் முடிந்ததும் மணமக்களிடம் இன்று எனக்கு 11 தங்கச்சிகள் கிடைச்சிருக்காங்க.

Also read : தானாக வந்து வலையில் சிக்கிய ஆடு.. பெரும் தொகையை கறக்க விஷால் போடும் பிளான்

அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், இல்லை என்றால் வேட்டியை மடித்துக் கொண்டு வந்து விடுவேன் என்று உரிமையோடு பேசினார். இதனால் விஷாலை பலரும் பாராட்டினர். ஆனால் இன்று வந்த தகவலின் படி விஷால் நடத்தி வைத்த அந்த திருமணத்தில் இருக்கும் சீக்ரெட் வெளியாகி உள்ளது.

அதாவது விஷால் இப்படி அரும்பாடு பட்டு நடத்தி வைத்த இந்த திருமணத்தில் சில உள்குத்து வேலைகளும் நடந்து இருக்கிறது. அதாவது மணமக்களில் சிலருக்கு இது முதல் திருமணமே கிடையாதாம். இந்த விஷயம் தான் தற்போது மீடியாவில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மேலும் விஷால் நடத்தி வைத்த திருமணத்தில் நடந்த இந்த குளறுபடிகள் பார்ப்பவர்களுக்கு சிரிப்பையும் வரவழைத்து இருக்கிறது.

Also read : என்னது விஷால் விஷயத்துல அப்படி ஒரு சம்பவமே நடக்கலையா? பகீர் கிளப்பி, அந்தர் பல்டி அடித்த நடிகை

விஷால் எதையும் தீர விசாரிக்காமல் அவசரமாக இந்த ஏற்பாட்டை செய்து விட்டாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. ஆனால் விஷால் தரப்பிலிருந்து இந்த இலவச திருமணங்கள் பற்றியும் இதில் இருக்கும் சர்ச்சை கருத்துக்கள் பற்றியும் எந்த விதமான விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.

அதனால் விஷால் இந்த விஷயத்தில் உண்மை நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இத்தனை வயதை கடந்தும் காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கும் விஷால் அவ்வப்போது இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி வருவது வழக்கமானது தான். இருந்தாலும் தற்போது வெளிவந்த சீக்ரட்டால் அவருடைய மானம் காற்றில் பறந்து விட்டது. விரைவில் இதற்கான விளக்கம் அவரிடமிருந்து வரும் என்று கூறுகின்றனர்.

Also read : 15 வயது வித்தியாசம், அருண் விஜய்யின் அண்ணியை திருமணம் செய்யும் விஷால்.. வயசானாலும் தரமான செலெக்ஷன்

- Advertisement -