70 கோடியில் உருவாகும் விஷால் படம்.. ஆனா அந்த இயக்குனர நினைச்சாதான் பயமா இருக்கு

விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. இப்படத்தில் வில்லனாக ஆர்யா நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த காட்சிகள் திரையரங்கில் கைதட்டல் வாங்கி கொடுக்கும் என கூறி வருகின்றனர்.

நாளுக்கு நாள் விஷாலின் மார்க்கெட்டில் உயர்ந்து கொண்டு போவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இவர் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்துமே 20 கோடிக்கு பட்ஜெட்டுக்கு மேல் உருவாவதாக கூறிவருகின்றனர். அதற்கு காரணம் விஷால் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மீதான வரவேற்பு தான் என சினிமா பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது விஷால் எனிமி படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் இப்படத்தை வினோத் தயாரிப்பதாகவும் கூறிவருகின்றனர். மேலும் இப்படத்திற்கு 70 கோடிக்கு மேல் பட்ஜெட் போட்டதாகவும் மிக பிரம்மாண்ட முறையில் படத்தை எடுக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.Adhik-Ravichandran-Talks-About-Simbu-Aka-Strs-AAA

ஆனால் ஒரு சிலர் விஷால் படத்திற்கு 70 கோடி பட்ஜெட் ஒன்றும் பெரிதல்ல, ஆனால் ஆதிக் ரவிச்சந்திரனை வைத்து 70 கோடி பட்ஜெட்டில் படம் உருவாவதற்கு தயாரிப்பாளர் யோசித்திருக்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஏனென்றால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

ஆனால் படத்தை கூடிய விரைவில் எடுக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பிற்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறி வருகின்றனர். இப்படத்தில் விஷால் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்