வேலையைக் காட்டிய பயில்வான்.. வெளியில பாத்துக்குறேன்னு  மிரட்டிவிட்ட விஷால்

vishal : விஷால், ஹரி கூட்டணியில் உருவாகி உள்ள ரத்னம் படம் ஏப்ரல் 26 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே விஷாலின் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்த சூழலில் ரத்னம் படம் மீது விஷால் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக இப்போது படு பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதற்காக சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் விஷால் பேசி இருந்தார்.

முன்பு சின்ன பட்ஜெட் படங்களை தயாரிப்பவர்கள் சினிமாவில் படம் எடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இப்போது அவர்களுக்கு ஆதரவாக விஷால் பேசியது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

பயில்வான் கேள்வியால் கோபமடைந்த விஷால்

அதாவது சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் யாருடைய ஆதரவு மற்றும் துணையும் இல்லாமல் படத்தை தயாரிக்க வேண்டாம் என்பதுதான் நான் சொல்கிறேன். ஏனென்றால் ஜீவா படத்தை தயாரித்தேன். அந்தச் சமயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதால் தியேட்டர் எல்லாம் மூடப்பட்டது.

இதன் காரணமாக அப்போது தனக்கு 4 கோடி நஷ்டம் அடைந்ததாக விஷால் கூறி உள்ளார். இதனால் நன்றாக யோசித்து விட்டு சிறிய தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது பயில்வான் ரங்கநாதன் மலையாளத்தில் மஞ்சுமல் பாய்ஸ், ப்ரேமலு போன்ற சிறு பட்ஜெட் படங்கள் நல்லா தான் ஓடிடுச்சு என்று பயில்வான் குறிப்பிட்டார்.

இதனால் கோபமடைந்த விஷால் அவருடைய கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. மேலும் ஒரு பொதுச் செயலாளர் போல என்ன பேச வச்சிடாதீங்க. பயில்வானுக்கு நான் வெளியில பதில் சொல்கிறேன், இங்கு பேசினால் வேறு மாதிரி ஆகிவிடும் என விஷால் கூறினார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்