மீண்டும் சர்ச்சையில் விஷால் பட தலைப்பு.. கால் வைக்குற இடதுலலாம் கண்ணிவெடிய வச்சா என்ன பண்ணுவாரு மனுஷன்

விஷாலின் 31-வது படமாக அவரது பிறந்தநாளன்று தலைப்புடன் கூடிய போஸ்டர் ஒன்று வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. அவரின் அடுத்த படத்திற்கு ‘வீரமே வாகை சூடும்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இதற்கு முன்னால் இந்த படத்திற்கு ‘நாட் ஏ காமன் மேன்’ என்ற சப்டைட்டில் வைத்து சர்ச்சையானது. அதாவது விஷாலின் அசிஸ்டன்ட் ஒருவர் காமன் மேன் என்ற தலைப்பில் கதையை விஷாலிடம் கூறியதாகவும்.

ஆனால் அதே தலைப்பை விஷால் தற்போது வைத்துள்ளதால் கதையும் அதே போல் தான் இருக்கும் என்பது போன்ற சர்ச்சை கிளம்பியது. இதனால் விஷால் கதையை அட்டை காப்பி அடித்து இருப்பதாகவும் விவாதம் வைக்கப்பட்டது. இதனால் யோசித்து தூய தமிழில் தனது படத்தின் டைட்டிலை மாற்றிக்கொண்டார் விஷால்.

இதே படம் தற்போது தெலுங்கில் எடுக்கப்பட்டு வருகிறதாம், அந்த படத்திற்கு ‘காமன் மேன்’ என்ற தலைப்பில் தான் வைத்துள்ளாராம் விஷால். அந்த தலைப்பின் மீது அப்படி என்ன மோகம் என்று தெரியவில்லை.

ஒருவேளை கதையின் கரு படத்தின் தலைப்பை மையமாக வைத்து இருப்பதால், ஒரே பிடியாக இருக்கிறார் விஷால். எது எப்படியோ ‘வீரமே வாகை சூடும்’ என்ற தலைப்புக்கு ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

veeramay-vaagai-sudum
veeramay-vaagai-sudum
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்