சோடை போனதால் கொடுக்கிற சம்பளத்தை வாங்கி நடிக்கும் பரிதாபம்.. மறுபடியும் ஹரி கூட்டணியில் விஷால்

சமீப காலமாகவே விஷாலுக்கு கொஞ்சம் கெட்ட நேரம் வாட்டி வதக்குகிறது. சினிமாவில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அதனாலேயே தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் தொடர்ந்து ஃபெயிலியர் ஆகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்கள் இவருக்கு சொல்லும் படியாக கை கொடுக்கவில்லை.

இப்படி இருக்கையில் இவருடைய மார்க்கெட் பெரிய அளவில் சரிந்து விட்டது. இதிலிருந்து மீண்டு ஒரு மாஸ் ஹீரோவாக பழைய மாதிரி திரும்பி வரவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி” படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.  இதில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

Also read: 3 ஆக்சன் ஹீரோக்களை ஒன்று சேர்க்கும் ஹரி.. ஸ்டூடியோ திறந்த கையோடு படத்திற்கு போடப்படும் பிள்ளையார்சுழி

அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இவரை இயக்கி நடித்து வருகிறார். ஆனால் இப்படம் மாதக்கணக்கில் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் படப்பிடிப்பு எப்பொழுது முடிந்து வெளிவரும் என்று தெரியவில்லை. ஆனால் இனி இவர் நடித்து வெளிவரும் படங்கள் கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக எல்லா விஷயத்தையும் சரியாக யோசித்து அதற்கேற்ற மாதிரி பிளான் பண்ணி நடித்து வருகிறார்.

அடுத்ததாக இவருடைய வெற்றி இயக்குனர் ஹரியுடன் கூட்டணியில் இணைகிறார். இவர் இயக்கி விஷால் நடித்து வெற்றி பெற்ற படமான தாமிரபரணி, பூஜை இந்த இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனால் மூன்றாவது முறையாக ஹரியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கு தற்காலிகமாக விஷால் 34 என்று பெயர் வைத்து சமீபத்தில் இதற்கான பூஜையும் நடைபெற்று படப்பிடிப்பு தொடங்கி விட்டது.  அதே நேரத்தில் ஹரியும் எந்த படங்களையும் இயக்காமல் மார்க்கெட்டு இல்லாமல் துவண்டு போயிருந்தார்.

Also read: புது அவதாரம் எடுக்கும் விஷால்.. தளபதி விஜய்யின் கைராசியால் வந்த விடிவுகாலம்

இந்நிலையில் தற்போது ஹரி “குட் லக்” என்று ஒரு ஸ்டூடியோவை ஆரம்பித்து இருக்கிறார். இதனால் அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் விஷாலுடன் கைகோர்த்து இருக்கிறார். அதே நேரத்தில் விஷால் 34 படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கிடையில் விஷால் மற்றும் ஹரியுடைய மார்க்கெட் ரொம்பவே சரிந்து போய் இருப்பதால் அவர்களுடைய சம்பளத்தை மிகவும் கம்மியாக நிர்ணயித்திருக்கிறார்.

அதாவது ஹரிக்கு இந்த ப்ராஜெக்ட் காக ஒன்றரை கோடி சம்பளம் மட்டுமே பேசி இருக்கிறார்கள். அதே மாதிரி விஷாலுக்கு 7 கோடி கொடுக்கப் போவதாக முடிவு செய்துள்ளார்கள். ஆனால் விஷால் இப்படத்திற்கு 15 கோடி கேட்டதாகவும் அதை தயாரிப்பாளர் கொடுக்க முடியாது ஏழு கோடி தான் சம்பளம் என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்கள். விஷாலுக்கும் வேறு வழியில்லாமல் இந்த சம்பளத்திற்கு ஒத்துக் கொண்டார். ஒருவேளை இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து லாபத்தை கொடுத்தால் அதிலிருந்து கொஞ்சம் இயக்குனருக்கும் விஷாலுக்கும் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

Also read: லைக்காவை டீலில் விட்ட விஷால்.. நண்பர்களால் திருப்பி அடிக்கும் கர்மா

Next Story

- Advertisement -