சைக்கிள்ல வந்து ஓட்டு போட்டது விஜய்ய பார்த்து இல்ல.. நல்லா உருட்டும் விஷால்

Actor Vishal: சமீபத்தில் தமிழகத்தில் நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்தனர்.

அதன்படி விஷால் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். இதைத்தான் விஜய் ரசிகர்கள் இப்போது கிண்டலடித்து வருகின்றனர்.

ஏனென்றால் கடந்த தேர்தலில் விஜய் இப்படித்தான் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். அது மிகப்பெரும் வைரலானது. அதை விஷால் அப்படியே காப்பி செய்து விட்டார் என்று பேசப்பட்டது.

விஷால் கொடுத்த விளக்கம்

தற்போது அதை மறுத்துள்ள விஷால் என்னிடம் கார் கிடையாது அதை விற்று விட்டேன். இப்போது சாலைகளின் கண்டிஷன் மோசமாக இருக்கிறது.

டிராபிக் ஜாம் இல்லாமல் சீக்கிரம் செல்வதற்காக தான் சைக்கிளில் வந்தேன். மற்றபடி விஜய்யை பார்த்து காப்பியடிக்கவில்லை என விளக்கியுள்ளார்.

இதுவும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வளவு சம்பளம் வாங்கும் உங்களுக்கு கார் கூட இல்லையா? இதெல்லாம் நம்ப சொல்றீங்களா? என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்