நான் டைரக்ட் பண்ண படத்தை என்னாலயே பாக்கமுடியல என்ற விஷால்.. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி

விஷாலின் சமீபத்திய நடவடிக்கைகளையெல்லாம் பார்த்தால் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கணக்காக தான் உள்ளது. அந்த அளவிற்கு தன்னுடைய முடிவுகளில் பல தடுமாற்றங்களில் உள்ளார்.

ஒருகட்டத்தில் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த விஷாலுக்கு இரும்புத்திரை மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் மீண்டும் விஷாலுக்கு வெற்றி பாதையை அமைத்துக் கொடுத்தன.

இதனால் அந்த வெற்றி பாதையை அப்படியே தக்க வைக்க வேண்டும் என்பதற்காக துப்பறிவாளன் 2 படத்தை தொடங்கி லண்டனில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென விஷாலுக்கும் அந்த படத்தை இயக்கி வந்த மிஷ்கினுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

இருவரும் மாறி மாறி சமூக வலைதளங்களிலும் பேட்டிகளிலும் தாக்கிப் பேசி கொண்டனர். அதுவும் மிஸ்கின் பேசியதெல்லாம் கேட்டால் காது கருகிவிடும். அந்த அளவுக்கு கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.

இந்நிலையில் விஷால் நானும் முதலில் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த ஆள் தான் என நின்றுபோன துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பை தானே இயக்கி வந்தார். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை படமாக்கி போட்டு பார்த்துள்ளார். இதற்கு பார்க்காமலேயே இருந்திருக்கலாம் என்கிற அளவுக்கு இருந்ததாம் அவர் இயக்கிய பகுதிகள்.

அதுமட்டுமில்லாமல் மிஷ்கின் இயக்கிய பகுதிக்கும், விஷால் இயக்கிய பகுதிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களாம். படத்தில் ஒன்றுடன் ஒன்று சேரவே இல்லை என்பதால் தற்போது அந்த படத்தை கைவிட முடிவு எடுத்துள்ளாராம் விஷால். எங்கேயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தா என்ற கணக்காக கொஞ்ச நாட்களாகவே விஷாலுக்கு சனி உச்சத்தில் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக விஷால் மற்றும் ஆர்யா நடித்து வரும் எனிமி படத்தைத்தான் பெரிதும் நம்பிக்கை கொண்டிருக்கிறாராம்.

thupparivaalan2-cinemapettai
thupparivaalan2-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்