சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக நானா ?. தெளிவுபடுத்திய விஷால்

சமீபகாலமாக விஷால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை சில சமயங்களில் படப்பிடிப்புக்கே வருவதில்லை என தொடர்ந்து அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமே உள்ளது. மேலும் அவருடைய படங்களும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் விஷால் சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் களம் காண உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதாவது ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் குப்பம் தொகுதியில் 2024 இல் விஷால் போட்டியிடுகிறார் என்ற செய்தி இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

அதாவது தற்போது ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் ஜெகன்மோகன் ரெட்டி தனது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக விஷாலை குப்பம் தொகுதியில் களமிறங்கயுள்ளார் என்ற செய்தி வெளியானது.

அதாவது சந்திரபாபு நாயுடு சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில் அவருக்கு கடுமையான போட்டி நிலவும் வகையில் பிரபலமான ஒருவரை நியமிக்க வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார். அதனால் குப்பம் தொகுதி தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ளதாலும், அங்கு விஷால் நன்கு பிரபலம் அடைந்தவர் என்பதாலும் அவரை தேர்தலில் நிற்க வைக்கலாம் கூறப்பட்டது.

ஆனால் இவை அனைத்திற்கும் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆந்திரப் பிரதேசம் குப்பம் தொகுதியில் நான் போட்டியிடுவதாக செய்திகள் பரவி வருகிறது. அது முற்றிலும் வதந்தியே. ஆந்திர அரசியலில் நுழைவது அல்லது சந்திரபாபு நாயுடுவை எதிர்த்துப் போட்டியிடுவதிலும் எனக்கு எந்த எண்ணமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆந்திர அரசியல் சம்பந்தமாக யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. தனக்கு என்றுமே சினிமா மட்டும் தான் எல்லாமே. மேலும் அரசியலில் நுழையும் எண்ணம் தனக்கு இல்லை என விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.