28 நாளில் அந்த விஷால் மாதிரி மாறிடுங்க! ரத்னத்தை பிழிந்து எடுக்க ஹரி செய்த வேலை

Director Hari : ஹரி, விஷால் கூட்டணியில் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது உருவாகி இருக்கிறது ரத்னம். பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 

நாளை இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் விஷால் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் ரத்னம் படத்தில் விஷாலை இப்படி மாறிடு என ஹரி கூறியதைப் பற்றி அந்த பேட்டியில் விஷால் சொல்லி உள்ளார். 

அதாவது 14 வருடங்களுக்கு முன்பு தாமிரபரணி, சண்டக்கோழி போன்ற படத்தில் இருந்த விஷால் தான் ரத்னம் படத்திற்கு தேவை. அதுபோல் உடம்பை மாற்றிவிடு என்று கூறி இருக்கிறார். ஹரி இதற்கு எத்தனை மாதம் வேண்டும் என்று விஷால் இடம் கேட்டிருக்கிறார். 

28 நாட்களில் உடம்பை குறைத்த விஷால்

இதற்கு விஷால் இருபதில் இருந்து 28 நாட்கள் போதும் என்று அசால்டாக கூறிவிட்டாராம். நீ மூணு மாசம் கேட்பேன் என்று நினைத்தேன் ஆனால் 28 நாட்களில் முடியுமா என்று ஹரி யோசித்தாராம். அதிலிருந்தே ஒர்க் அவுட் பண்ண விஷால் ஆரம்பித்து விட்டாராம். 

அதிலும் 20% பிட்னஸ் மற்றும் 60% டயட் என இருந்தாராம். அப்பா, அம்மாவுக்கு மட்டும் ஒரு வண்டியை வைத்துவிட்டு தன்னுடைய வண்டி எல்லாம் விற்று விட்டாராம். மேலும் சைக்கிள் வாங்கி எங்கு சென்றாலும் அதில் தான் சென்று கொண்டிருந்தார். 

ஓட்டு போட கூட சைக்கிளில் சென்றது இதனால் தான் என்று விஷால் கூறியிருந்தார். அது விஜய்யை ஃபாலோ செய்வதாக மாறிவிட்டது. மேலும் 28 நாட்கள் கழித்து ஹரியை விஷால் சந்தித்தபோது அப்படியே ஆச்சரியப்பட்டு போய் விட்டாராம். அவ்வாறு ரத்னத்தை பிழிந்து எடுத்து இருக்கிறார் ஹரி. 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்