இரும்புத்திரை ஹிந்தி ரீமேக்கில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க போகும் தமிழ் நடிகர்.. மிரள போகும் பாலிவுட்

நடிகர்கள் அனைவரும் தற்போது கதாநாயகன் கதாபாத்திரத்தை விட்டு வில்லன்  கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில். தற்போது விஷால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான இரும்புத்திரை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் முழுக்க முழுக்க சமூகவலை தளங்களில் நடக்கும் சைபர்கிரைம் மையப்படுத்திய எடுக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக அர்ஜுன் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களிடம் நல்ல பாராட்டை பெற்றது. தற்போது விஷால் நடித்து வெற்றியடைந்த இரும்புதிரை திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.

vishal salman khan
vishal salman khan

விஷால் கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் வில்லனாக நடித்த அர்ஜுன் கதாபாத்திரத்தில் விஷால் நடிப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்தி சினிமாவில் விஷால் முதன்முதலாக கால்பதிக்க உள்ளார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் விஜய்சேதுபதி பாலிவுட்டில் ஒரு வெப் சீரியல் நடிக்க உள்ளார். தற்போது விஷாலும் வில்லனாக பாலிவுட்டில் களமிறங்கும் உள்ளதால் விஜய் சேதுபதியின் பாணியை அப்படியே விஷால் பின்பற்றுவதாகவும்.

கோலிவுட்டில் விஜய் சேதுபதியை தோற்கடிக்க முடியாததால் பாலிவுட்டில் விஜய் சேதுபதி தோற்கடிக்கும் முயற்சியில் விஷால் களமிறங்கி உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அர்ஜுன், அரவிந்த்சாமி வரிசையில் தற்போது விஷாலும் வில்லனாக இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்