விசாரணை பட போலீஸ் அதிகாரி திடீர் மரணம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் திரையுலகம்

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான விசாரணை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் வெற்றிமாறன் சரியாக தேர்ந்தெடுத்திருந்தார். அந்த அளவுக்கு அவர்கள் கனகச்சிதமாக பொருந்து இருந்தார்கள்.

இந்த சூழலில் விசாரணை படத்தில் நடித்த போலீஸ் அதிகாரி திடீர் மரணம் அடைந்துள்ளார். இதை அறிந்த சினிமா பிரபலங்கள் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அதாவது இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஈ.ராமதாஸ்.

Also Read : சிம்புவுடன் நேருக்கு நேராக மோதும் சூரி.. தேவையில்லாமல் கோர்த்து விடும் வெற்றிமாறன்

இவர் மோகன் நடிப்பில் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்பு பல படங்களை இயக்கி வந்த இவர் நடிகராகவும் தனது முத்திரையை பதித்துள்ளார். அந்த வகையில் விசாரணை, விக்ரம் வேதா, தர்மதுரை, யுத்தம் செய் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

அதிலும் விசாரணை படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அது மட்டும் இன்றி பல கதை விவாத மேடைகளிலும் ராமதாஸ் பங்கு பெற்றுள்ளார். இந்த சூழலில் உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் ஈ ராமதாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Also Read : விசாரணை பட லெவலில் சத்தமே இல்லாமல் உருவாகி வரும் படம்.. இப்பமே ஹிட் உறுதியாம்

அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ராமதாஸ் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று ராமதாஸின் இல்லமான கே கே நகரில் அவரது இறுதிச் சடங்குகள் நடக்கும் என ராமதாஸின் மகன் கலைச்செல்வன் கூறியுள்ளார். திரை பிரபலங்கள் பலரும் ராமதாஸின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இதை அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். மேலும் ராமதாஸின் இழப்பினால் ஒரு நல்ல கலைஞனை தமிழ் சினிமா இழந்துள்ளது. மேலும் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள். ராமதாஸின் இறப்பு யாராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு.

visaranai-ramadoss

Also Read : 9 வருடங்களில் இதையெல்லாம் இழந்தேன்.. மனம் உருகி பேசிய அட்டகத்தி தினேஷ்