ஓரமா போங்க கார்த்தி.. லெஜண்ட் அண்ணாச்சி கிட்ட தோற்றுப்போன விருமன்

முத்தையா, கார்த்தி கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியிருக்கும் படம் விருமன். இப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால் கிராமத்து கதையில் கார்த்தி பின்னி பெடல் எடுக்க கூடியவர்.

இந்நிலையில் நேற்று வெளியான விருமன் படம் அண்ணாச்சியின் தி லெஜண்ட் படத்துடன் தோற்றுப் போய் உள்ளது. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் காலை 4 மணி காட்சி வைக்கப்படும். இதனால் ரசிகர்கள் விடியற்காலையிலேயே திரையரங்குகளில் ஆர்ப்பரித்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் விருமன் படத்திற்கு காலை 4 மணி ஷோ இல்லையாம். அரசாங்கத்திடம் இதற்கு எவ்வளவு கேட்டு போராடியும் அவர்கள் செவி சாய்க்கவில்லையாம். ஆனால் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் தி லெஜண்ட் படத்திற்கு காலை 4 மணி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு முக்கிய காரணம் உதயநிதி தான். அவர்தான் இந்தப் விஷயத்தில் தலையிட அண்ணாச்சி படத்திற்கு அனுமதி வாங்கி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அண்ணாச்சியின் படம் உலகம் முழுவதும் 2500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

பெரிய நடிகர்களுக்கு கூட இவ்வளவு திரையரங்குகள் ஒதுக்க மாட்டார்கள். ஆனால் அண்ணாச்சி படம் பல சாதனைகளை படைத்தது. இந்நிலையில் தற்போது கார்த்தியின் விருமன் படத்திற்கு நேர் மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்