திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

விருமன் வசூல், கோடிகளை குவித்து சாதனை.. இன்னும் என்ன பைத்தியகாரனாவே நினைக்கிரல

கார்த்தி நடிப்பில் வெளியான படங்களில் விருமன் படத்தின் வசூல் போல் முதல் நாள் வசூல் எந்த படமும் செய்ததில்லை. அதாவது நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியான விருமன் படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 8.2 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கார்த்தி, முத்தையா கூட்டணியில் இரண்டாவது படம் விருமன். இப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

ஒரு பெரிய இயக்குனரின் மகள் என்பதால் இப்படத்திற்கு ஏகப்பட்ட புரொமோஷன் செய்யப்பட்டிருந்தது. இப்படத்தில் அதிதி ஷங்கர் ஒரு பாடல் பாடியிருந்தார். மேலும் படத்திற்கு யுவனின் இசை பலம் சேர்த்திருந்தது. இவ்வாறு பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் விருமன் படம் வெளியானது.

இந்நிலையில் முதல்நாள் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்ததால் படத்தின் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது நாளும் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக இருந்தது. அந்தவகையில் நேற்றும் விருமன் படம் 8 கோடி வசூல் செய்திருந்தது.

இவ்வாறு தொடர்ந்து விருமன் படத்திற்கு வரவேற்பு கிடைத்த வண்ணம் உள்ளது. மேலும் இன்னும் ஒரு வாரத்திற்கு எல்லா டிக்கெட்டுகளும் விற்றதாக கூறப்படுகிறது. இதனால் எப்படியும் இந்த வாரத்துக்குள் பெத்த லாபத்தை விருமன் படக்குழு பார்க்க உள்ளது.

மேலும் விருமன் படம் இரண்டு நாள் முடிவிலேயே 16 கோடி வசூல் செய்த நிலையில் எப்படியும் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் படத்திற்கான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் தட்டி தூக்கி வசூல் சாதனை படைத்து வருகிறது.

- Advertisement -

Trending News