அஜித்தின் இயக்குனர் என்பதை நிரூபித்த வினோத்.. ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ்

பெரும்பாலும் அஜித் ஒரு இயக்குனருடன் கூட்டணி போட்டால் தொடர்ந்து அடுத்த படமும் அதை இயக்குனருடன் தான் பணியாற்றி வருகிறார். சமீபகாலமாக அஜித் இதை கடைப்பிடித்து வருகிறார். இந்த சூழலில் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற வினோத் அஜித்தை வைத்து தொடர்ந்து 3 படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், வினோத், நெல்சன் திலிப்குமார் ஆகியோர் ரசிகர்களின் விருப்பமான இயக்குனர்களாக உள்ளனர். இப்போது அஜித், வினோத் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் துணிவு.

Also Read : விஜயை ஒழித்து அவர் சாதனையை தடுக்க வேண்டும்.. பகடைக்காயான அஜித்.!

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த சூழலில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் படுஜோராக நடந்து வருகிறது. இதற்காக வினோத் தற்போது பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த வருகிறார்.

அந்த வகையில் ஒரு பேட்டியில் ரசிகர்களுக்கு வினோத் அட்வைஸ் கூறியுள்ளார். அதாவது சினிமாவில் பிரமோஷன் என்பது ரசிகர்கள் தான். அவர்களை காட்டிலும் படத்தை பெரிய அளவில் யாராலும் கொண்டு செல்ல முடியாது. ஆனால் சினிமாவில் அதிகமாக நேரத்தை செலவிட வேண்டாம்.

Also Read : உளறி தள்ளிய மஞ்சு வாரியர்.. கடுப்பில் ஹெச்.வினோத்தின் பட குழு

ஒரு படம் வெளியாக மூன்று நாட்களுக்கு முன்பு தான் டிக்கெட் புக் ஆகும். படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டரை வைத்து பார்க்கும் போது பிடித்திருந்தால் படத்தை பாருங்கள். மேலும் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு படம் பிடித்து இருந்தால் கூறுங்கள். அதன் பிறகு உங்களுக்கான வேலையை செய்யுங்கள்.

உங்களைப் பற்றி உங்களுக்கு மட்டுமே தெரியும். ஆகையால் உங்களின் திறமைக்கு ஏற்றவாறு நேரத்தை செலவிடுங்கள் என ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்து உள்ளார். அஜித் ஏற்கனவே இதே எண்ணத்தில் தான் ரசிகர் கூட்டத்தை கலைத்தார். இப்போது வினோத்தும் அஜித்தை போல யோசித்து அவரது இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார்.

Also Read : எச்.வினோத்தை பார்த்து எப்படி பேசணும்னு கத்துக்கோங்க.. தில் ராஜை அசிங்கப்படுத்திய சம்பவம்

- Advertisement -