வினோத்துக்கு தண்ணி காட்டும் கமல்.. பழசை தூசி தட்டும் இயக்குனர்

Vinodh-kamal: எச் வினோத் மற்றும் கமல் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பது முன்பே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை எப்போது தொடங்குவோம் என்று வினோத் காத்து கிடந்த நிலையில் கமல் அவருக்கு தண்ணி காட்டி வருகிறார். அதாவது ஏற்கனவே இந்தியன் 2 படபிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது.

இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியும் இப்போது போய் கொண்டு இருப்பதால் கமல் டேட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதாகுறைக்கு தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் நிறைய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் கமல் வினோத்துக்கு தண்ணி காட்டி வருவதால் இனி வேலைக்காகாது என இயக்குனர் வேறு முடிவு எடுத்து இருக்கிறார். அதாவது கமல் படத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்ற முடிவுக்கு வினோத் வந்து விட்டாராம்.

Also Read : புயலால் தத்தளிக்கும் சென்னை, டாப் ஹீரோக்கள் சூர்யா, கார்த்திக்கை பார்த்து கத்துக்கோங்க!

இந்த படத்திற்கான கதையை தயார் செய்யும் பணியில் இப்போது இறங்கி இருக்கிறார். மேலும் கார்த்திக் இப்போது நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தவிர கைதி 2 படமும் லைன் அப்பில் இருக்கிறது.

ஆனால் லோகேஷ் இப்போது ரஜினியின் படத்தை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆகையால் இப்போது விரைவில் கார்த்தி மற்றும் வினோத் கூட்டணியில் படம் உருவாவது உறுதியாக இருக்கிறது. ஆகையால் தீரன் 2 படத்திற்கான வேலை விரைவில் தொடங்குவது உடன் அதற்கான அறிவிப்பும் வெளியாக இருக்கிறது.

Also Read : பருத்திவீரன் படத்தில் நடிக்க வேண்டியது கார்த்தியே இல்ல.. உண்மையை போட்டு உடைத்த கஞ்சா கருப்பு