புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

படமே ஓடாத விக்ரமுக்கு இவ்வளவு சம்பளமா.. ஹிட் ஹீரோக்கள் கூட வாயை பிளக்கும் சம்பளம்

தமிழ் சினிமாவில் தனது கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி  ரொம்பவும் மெனக்கெட்டு நடிக்க கூடிய நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். சமீப காலமாகவே இவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை மட்டுமே சந்தித்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சருக்கல்களை சந்தித்துள்ள இவர் சம்பள விஷயத்தில் மட்டும் கராராக இருந்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ஹிட் படமாக அமைந்தது. ஆனால் அதற்கு முன் இவர் நடிப்பில் வெளியான மகான், கோப்ரா போன்ற படங்கள் இவருக்கு பெருத்த அடியை மட்டுமே தந்தது. கடின உழைப்பின் மூலம் தனது பங்களிப்பை கொடுத்து வந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றியை கொடுக்க முடியவில்லை.

Also Read: பா.ரஞ்சித், கௌதம் மேனன் கொடுத்த பூஸ்ட்.. தோல்வி படங்களை மறந்து சம்பளத்தை உயர்த்திய விக்ரம்!

தற்பொழுது விக்ரம், பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நட்சத்திர பட்டாளங்களுடன் இவர் நடித்த பொன்னியின் செல்வன்  திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தனது சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்தியுள்ளார்.

இப்பொழுது சினிமா துறையில் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற டாப்  ஹீரோக்கள் ஒரு படத்திற்காக மட்டுமே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். அதன் பிறகு அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் உள்ள ஹீரோக்கள் என்று பார்த்தால் தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் தான் இருந்து வருகின்றார்கள். 

Also Read: ஒரு கட்டத்தில் விக்ரமை தூக்கி விட்ட அஜித்.. இந்தப் படத்துக்கு பிறகு தான் கேரியர் டாப்ல வந்துச்சு

ஆனால் இது போக சினிமாவில் டாப்  நடிகர்களாக இருக்கக்கூடியவர்கள் ஹீரோக்களை விட வில்லன் கதாபாத்திரங்களுக்கு, சமீப காலமாகவே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் எஸ் ஜே சூர்யா, விஷால்  போன்ற நடிகர்கள் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து எக்கச்சக்கமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால் விக்ரமுக்கு படமே இப்பொழுது ஓடுவதில்லை. இருந்தாலும் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார். தொடர் தோல்வி படங்களை கொடுத்த நிலையில் தற்பொழுது நடித்திருக்கும் படம் வெளி வராமல் இருக்கும் பொழுதே தனது சம்பளத்தினை உயர்த்தியுள்ளார். அதிலும் ஹிட் ஹீரோக்களே கூட வாயை பிளக்கும் அளவிற்கு தனது சம்பளத்தினை 30 கோடி வரை உயர்த்தியுள்ளார்.

Also Read: கமல் நிலைமை தான் விக்ரமுக்கும்.. ரிலீசுக்கு முன்பே அந்த படத்திற்கு வந்த மோசமான விமர்சனங்கள்

- Advertisement -

Trending News