விரைவில் ரிலீசாக போகும் விக்ரமின் கோப்ரா.. வெளிவந்த அசத்தல் அப்டேட்

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து நம்மை அசத்தி வருபவர் நடிகர் விக்ரம். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மகான் திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதை தொடர்ந்து இவர் பல கெட்டப்புகளில் போட்டு அசத்தியிருக்கும் கோப்ரா திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் விக்ரமுடன் இணைந்து ஶ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதில் விக்ரம் படு மிரட்டலாக விதவிதமான கெட்டப்புகளில் அனைவரையும் கவர்ந்தார். எப்போதோ முடிவடைய வேண்டிய இப்படத்தின் ஷூட்டிங் கொரோனா பாதிப்பின் காரணமாக தடைபட்டு வந்தது.

அதன் பிறகு சில சில பிரச்சினைகளின் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிபோனது. இந்நிலையில் விக்ரமின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏ ஆர் ரகுமானின் கலக்கலான இசையில் சமீபத்தில் வெளியான ஆதிரா பாடல் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தற்போது மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து வரும் கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் நாயகியும் இந்த படத்தில் நடித்திருப்பது ஆர்வத்தை தூண்டியுள்ளது.

அதனால் விரைவில் இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்ரமின் நடிப்பில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது.