தங்கலானுக்குப் பிறகு தரமான சம்பவம்.. மரண மாஸாக வந்துள்ள சியான் 62 அப்டேட்

Actor Vikram : கமலுக்கு அடுத்தபடியாக சினிமாவுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் விக்ரம். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை தவிர்த்து கடந்த சில வருடங்களில் விக்ரமின் வெற்றி படங்கள் என்று எந்த படங்களும் அமையவில்லை.

இதனால் இப்போது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் விக்ரம் இருந்து வருகிறார். இதனால் தன்னை மறைத்துக் கொண்டு வித்யாசமான கேரக்டரில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் தங்கலான்.

பா ரஞ்சித் இயக்கி வரும் இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் தங்கலான் படம் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

விக்ரமின் சியான் 62 கூட்டணி

தங்கலான் படத்திற்குப் பிறகு இப்போது மரண மாஸ் கூட்டணியில் இணைந்துள்ளார் விக்ரம். அதன்படி சியான் 62 படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. சித்தார்தின் சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விக்ரமின் 62 வது படம் உருவாக உள்ளது.

இதற்கான ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடிக்க உள்ளனர்.

எஸ்ஜே சூர்யா சமீபகாலமாக வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் சீயான் 62 படத்திலும் பயங்கரமான கேரக்டரில் நடிக்க உள்ளார். மேலும் அருண்குமாரின் சித்தா படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதனால் அவரின் இரண்டாவது படமே விக்ரமுடன் கூட்டணி போட்டிருக்கிறார். இப்படம் கண்டிப்பாக விக்ரமுக்கு கம்பேக்காக அமையும். மேலும் விரைவில் தங்கலான் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியும் தொடங்க இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்