சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மனைவியை காப்பாற்ற மொத்த சொத்தையும் விற்ற விக்ரமன்.. அதிரடியாக இறங்கிய ரியல் ஹீரோ

Director Vikraman: தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான கதை மற்றும் பெண்கள் மீதான சமூக அக்கறையை மையமாகக் கொண்ட படங்களை எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தவர் தான் இயக்குனர் விக்ரமன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், இவருடைய மனைவி ஜெயப்பிரியாவுக்கு  தனியார் மருத்துவமனையில் முதுகில் செய்த தவறான சிகிச்சையினால் அவரால் நடக்க முடியவில்லை என்ற நிலையை மிகுந்த உருக்கத்துடன் தெரிவித்தார்.

அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதனால் அந்தப் பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என தமிழக அரசே இப்போது முன்வந்துள்ளது. இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு ஐந்து வருடத்திற்கு முன்பு நடந்த தவறான அறுவை சிகிச்சையால் கால்கள் கூட அசைக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாகிவிட்டார்.

இவரை கவனித்துக் கொள்வதற்காகவே விக்ரமன் படத்தை இயக்குவதை நிறுத்தி விட்டதாகவும், தன்னுடைய சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று தான் மனைவியை கவனித்து வருகிறார். விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா 4000 மேடைகளில் குச்சிப்புடி நடன கலைஞராக நடனமாடியவர்.

அப்படிப்பட்டவருக்கு தவறான அறுவை சிகிச்சை நடந்ததால் ஐந்து வருடங்களாக அவருடைய அன்றாட வேலையை கூட செய்ய முடியவில்லை. இதற்காக விக்ரமன் இழப்பீடு எதுவும் கேட்கவில்லை, ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது தன்னுடைய மனைவி எப்படி கூட்டிக்கொண்டு போனேனோ அந்த  மாதிரி கொடுத்தால் போதும் என்று உருக்குத்துடன் பேசினார்.

விக்ரமனின் இந்த பேட்டி வைரலாகி தமிழக அரசின் கவனத்திற்கு சென்றது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவின் பெயரில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் 15 மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் விக்ரமனின் வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

அங்கு விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதன்பிறகு அவரை பரிசோதித்து நல்ல முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதாகவும் உறுதியளித்தனர். விரைவில் ஜெயப்பிரியா குணமடைந்ததும் விக்ரமன் மறுபடியும் படங்களை இயக்கி ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார்.

- Advertisement -

Trending News