ஒரே ஒரு வெற்றிக்காக பகையை மறந்து தயாரிப்பாளரிடம் தஞ்சமடைந்த விக்ரம்.. ஹிட் இயக்குனருடன் கூட்டணி

Actor Vikram: விக்ரமுக்கு தற்போது நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வந்த சுவடு தெரியாமலேயே காணாமல் போய்விடுகிறது. ஆரம்பத்தில் படங்களுக்காக தன் தோற்றத்தை வருத்திக்கொண்டு நடித்து வந்தார். ஆனால் அதன் பின் வெற்றியை பார்க்க முடியாமல் தற்போது தத்தளித்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் எப்படியாவது ஒரே ஒரு வெற்றியாவது கொடுத்து விட வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார். அதற்கு தற்போது ஒரு அஸ்திவாரத்தை கையில் எடுத்திருக்கிறார். அதாவது இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கப் போகிறார். இவர் இயக்கிய படங்கள் ஆன பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் மற்றும் சித்தா. . இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமுதாய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அதிக வசூலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது விக்ரமை வைத்து படம் பண்ணப் போகிறார். இந்த இயக்குனர் ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு ரொம்பவே க்ளோஸ் ஃப்ரெண்ட். அந்த வகையில் ஆரம்பத்தில் இந்த கதை விஜய் சேதுபதிக்காக தான் யோசித்து எழுதப்பட்டது. ஆனால் அவர் மற்ற படங்களில் தற்போது பிஸியாக இருப்பதால் இந்த படத்திற்கு கால் சீட் அவரால் ஒதுக்க முடியவில்லை.

அதனால் இயக்குனர் அருண்குமார் இந்த கதையை கொண்டு விக்ரமிடம் சொல்லி இருக்கிறார். அவருக்கும் இந்த கதை மீது ரொம்பவே நம்பிக்கை வந்து விட்டதால் உடனே சம்மதத்தையும் கொடுத்து விட்டார். அந்த வகையில் இப்படத்தை தயாரிக்க போவது சிபு தமீன். இவர் ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த இருமுகன் படத்தை தயாரித்திருக்கிறார்.

ஆனால் அதன் பின் இவருக்கும், விக்ரமுக்கும் இடையில் ஏகப்பட்ட பிரச்சனை வந்தால் இவர்களுக்கு இடையே பிரிவு வந்துவிட்டது. அதன் பின் மறுபடியும் இந்த படத்தின் மூலம் தான் சேர இருக்கிறார்கள். ஏனென்றால் இந்த படத்தை அவர் தயாரித்து ஆக வேண்டும் என்பதனால் விக்ரம் இவரிடம் இருந்த பகை எல்லாம் மறந்து தஞ்சம் அடைந்து விட்டார்.

அந்த வகையில் சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. இந்த படமாவது விக்ரமுக்கு வெற்றி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கு இடையில் இவர் நடித்த துருவ நட்சத்திரம் பல வருடங்களாக இழுவையில் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறது. அட்லீஸ்ட் இந்த படமாவது சீக்கிரத்தில் ரிலீஸ் செய்து விக்ரம் உடைய கேரியரை தக்க வைத்துக் கொண்டால் அடுத்தடுத்த படங்களில் வெற்றியை பார்க்க முடியும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்