கடுப்பேற்றிய படக்குழு.. 300 கோடி பட்ஜெட் படத்தை தூக்கி எறிந்த சீயான் விக்ரம்

படக்குழுவினர் சொன்ன வாக்கைக் காப்பாற்றாததால் கடுப்பான சீயான் விக்ரம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை தூக்கி எறிந்து விட்டு வந்த சம்பவம் தான் கோலிவுட் வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அனைவரிடமும் கோபப்படாமல் தன்மையாக நடந்து கொள்ளும் சீயான் விக்ரமை கடந்த சில மாதங்களாகவே சில படக்குழுவினர் மாற்றி மாற்றி டென்ஷன் செய்துவருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அப்படித்தான் கோப்ரா படப்பிடிப்பின்போது இயக்குனர் சொன்னபடி நடந்து கொள்ளாததால் விக்ரம் அப்செட் ஆனதாக தகவல்கள் வந்தது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கிட்டதட்ட 300 கோடி பட்ஜெட்டில் மகாவீர் கருணா என்ற படம் உருவாகி வந்தது. சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் திடீரென விக்ரம் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

மகாவீர் கருணா படக்குழுவினர் நினைத்த நேரம் விக்ரமை அழைத்து ஷூட்டிங் செய்ததால் கடுப்பாகி விட்டாராம். இதனால் மகாவீர் கருணா படத்திலிருந்து விலகிக் கொள்வதாக கூறி விட்டார். இந்நிலையில் விக்ரம் நடித்த கதாபாத்திரத்திற்காக தற்போது பாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

மகாவீர் கர்ணா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய படத்தை சியான் விக்ரம் மிஸ் செய்து விட்டாரே என அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Mahavir Karna

இருந்தாலும் விக்ரம் ஏழு கெட்டப்புகளில் நடித்து வரும் கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் வந்தால் விக்ரம் மார்க்கெட் வேற லெவலுக்கு செல்லும் என கோலிவுட் வட்டாரங்களில் முனுமுனுக்கின்றனர்.

- Advertisement -