விக்ரம் உடன் கூட்டணி போடும் விஜய் சேதுபதி.. படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் பெரிதும் அலட்டி கொள்ளாத ஹீரோ என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ மட்டும் அல்லாமல் எந்த கேரக்டராக இருந்தாலும் இறங்கி நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அனைத்து ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினியுடனும், மாஸ்டர் படத்தில் விஜய்யுடனும், தற்போது விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்ரமுடன் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளார். பாகுபாடு இன்றி அனைத்து நடிகர்களுடனும் விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் சுவாரசியம் என்னவென்றால் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இணைய உள்ள புதிய படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம். அதுமட்டுமல்ல இப்படத்திற்கு கதை நடிகர் கமல் தான் எழுதுகிறாராம். கமல்ஹாசன் எழுதி தயாரிக்கும் படத்தில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்க உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர நடிகர் கமல் எழுதி தயாரிப்பதால் இப்படம் தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை.

சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி, கெளதமி ஆகியோர் நடிப்பில் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தேவர்மகன். இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை எந்த ஒரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்