ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மணிரத்னத்தை வச்சு செய்யப் போகும் விக்ரம்.. ஆப்பை திருப்பி கொடுக்குற நேரம் வந்தாச்சு

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் பொன்னியன் செல்வன். இப்படத்தில் விக்ரம், விக்ரம் பிரபு, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெயராம் என மிகப் பெரிய திரைபட்டாளமே நடித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளை படக்குழு ஆரம்பிக்கவுள்ளது. ஏற்கனவே விக்ரம், மணிரத்னம் இடையே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.

இவர்களிடையே ஏதோ ஒரு பிரச்சனை போய்க் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதனால்தான் பொன்னியின் செல்வன் படம் சம்பந்தமான எந்த விழாவிலும் விக்ரம் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் மறுநாள் நடந்த கோப்ரா பட விழாவில் கலந்து கொண்ட விக்ரம் வேண்டுமென்றே பொன்னியின் செல்வன் விழாவை தவிர்த்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள புரமோஷனுக்கு விக்ரம் போவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் படத்தில் விக்ரம் நடித்த ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தின் பாதி காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதற்கெல்லாம் சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்த விக்ரமுக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்கு விக்ரம் வரமாட்டார் என்றுதான் கூறப்படுகிறது. இதுவே படத்திற்கு பெரிய அடியாக இருக்கும். மணிரத்னம் இப்படத்தின் ப்ரோமோஷனை மிகப்பிரம்மாண்டமாக செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் சரியான நேரம் பார்த்து மணிரத்னத்தை வச்சு செய்ய போகிறார் விக்ரம்.

- Advertisement -

Trending News