வீட்டிற்கு வெளிப்படையாய் செல்ல முடியாத விக்ரம் .. பா ரஞ்சித்தால் படாதப்பாடு

சியான் விக்ரம் எப்பொழுதுமே எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக மெனக்கிடுவார். உலக நாயகன் கமல் போல் அடிக்கடி கெட்டப்பை மாத்தும் நடிகன். ஏற்கனவே கோப்ரா பட தோல்வியால் துவண்டு போயிருந்த விக்ரம் இந்த திரைப்படத்திற்காக ரொம்பவும் மெனக்கெட்டு வருகிறாராம்.

மேலும் விக்ரம் நடித்திருக்கும் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன்  இரண்டாம் பாகத்தின் வெளியீடு வருகிற ஏப்ரல் மாதத்தில் என்று ஏற்கனவே அறிவித்து விட்டனர். அத்துடன் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படம் படு வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது.

Also Read: 19ஆம் நூற்றாண்டின் சொல்லப்படாத வரலாறு.. விக்ரமின் நடிப்பை பற்றி ஓப்பனாக பேசிய பா ரஞ்சித்

கோலார் தங்க சுரங்கத்தில் அடிமைகளாக வாழும் பாமர மக்களை பற்றிய பல உண்மைகளை மையமாகக் கொண்டதுதான் தங்கலான் படத்தின் கதை. மேலும் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் கதாநாயகிகளாக இருவர் நடித்திருக்கின்றனர்.

இதில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் விக்ரம் வீட்டிற்கு கூட செல்ல நேரம் கிடைக்காமல், இப்பொழுது பா. ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். கிடைக்கும் கொஞ்சநஞ்ச நேரத்தில் வீட்டிற்கு சென்று வந்து விடலாம் என விக்ரம் நினைத்தாலும் வெளிப்படையாக செல்ல முடியாமல் படாத பாடுபடுகிறார்.

Also Read: பொன்னியின் செல்வன் 2 ரிலீசுக்கு வரும் பெரும் சிக்கல்.. படாதபாடு படும் ஜெயம் ரவி, விக்ரம்

ஏனென்றால் பா. ரஞ்சித் தங்கலா படத்தில் இடம்பெறும் விக்ரமின் கெட்டப்பை யாரிடமும் காட்டாமல் சீக்கிரமாக வைத்திருக்கிறார். இதனால் விக்ரமும் அவருடைய சொந்த வீட்டிற்கு கூட ரகசியமாக சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமின் கதாபாத்திரத்திற்காக மேக்கப் போடுவதற்கு மட்டுமே கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆகுமாம்.

அந்த அளவுக்கு அவர் தன்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக வேறுபடுத்தி காட்டி இருக்கிறாராம். இது குறித்து ஏற்கனவே போஸ்டர்கள் வெளிவந்தது. அது மட்டுமல்லாமல் 19 ஆம் நூற்றாண்டு மக்களை அப்படியே கண்முன் காட்டும் அளவுக்கு அவருடைய நடிப்பு பிரம்மிப்பாக இருப்பதாகவும், அதற்காக விக்ரம் ரொம்பவே ரிஸ்க் எடுத்திருக்கிறாராம். இதனாலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Also Read: வரிசை கட்டி நிற்கும் விக்ரமின் 4 படங்கள்.. பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக வரும் தங்கலான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்