ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பா.ரஞ்சித், கௌதம் மேனன் கொடுத்த பூஸ்ட்.. தோல்வி படங்களை மறந்து சம்பளத்தை உயர்த்திய விக்ரம்!

நடிகர் விக்ரம் சினிமாவில் ரொம்பவும் கஷ்டப்பட்டு முன்னேறிய முன்னணி ஹீரோ. விஜய், அஜித், சூர்யாவுக்கு இணையாக வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தார் இவர். ஆனால் தற்போது விக்ரம் கடைசியாக எப்போது வெற்றி படம் கொடுத்தார் என்று கேட்டால் அவருடைய ரசிகர்களுக்கே ஞாபகம் இருக்காது. அந்த அளவுக்கு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார் விக்ரம்.

உண்மையை சொல்லப்போனால் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு விக்ரமுக்கு எந்த ஒரு வெற்றி படமும் அமையவில்லை. வருடத்திற்கு ஒரு படம் என்று அவர் ரிலீஸ் செய்தாலும் படம் அத்தனையுமே தோல்வி படங்களாக தான் அமைந்தன. மேலும் கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு பிறகு இரண்டு மூன்று வருடங்கள் மிகப்பெரிய இடைவெளி வேறு விட்டுவிட்டார் விக்ரம்.

Also Read: விக்ரமின் தங்கலான் படத்தில் இணையும் ஹாலிவுட் பிரபலம்.. இணையத்தை பற்ற வைத்த நெருப்பாக போஸ்டர்

நீண்ட இடைவெளிக்கு பிறகு தியேட்டரில் ரிலீஸ் ஆக வெளியான மகான் திரைப்படத்தின் மீது விக்ரமும் அவருடைய ரசிகர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால் அந்த படம் அவருக்கு தோல்வி படமாகவே அமைந்தது. படம் தோல்வி படமாக இருந்தாலும் விக்ரம் அந்தப் படத்திற்கு 14 கோடி சம்பளம் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகானுக்கு பின்னர் வெளியான கோப்ரா திரைப்படம் விக்ரமுக்கு படுதோல்வியாக தான் அமைந்தது. அதன் பின்னர் அவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ஹிட் படமாக அமைந்தாலும் அது மல்டி ஸ்டார்ஸ் படமாக இருக்கிறது. இதற்கிடையில் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு 22 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

Also Read: வீட்டிற்கு வெளிப்படையாய் செல்ல முடியாத விக்ரம் .. பா ரஞ்சித்தால் படாதப்பாடு

இந்நிலையில் தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே சீயான் விக்ரம் தன்னுடைய சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி இருக்கிறார். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே எதற்காக இப்படி இவர் சம்பளத்தை உயர்த்துகிறார் என்று கேட்டால் அது தங்கலான் படத்தின் வியாபாரத்தின் மீது இருக்கும் நம்பிக்கையும், மேலும் நீண்ட வருடம் கழித்து ரிலீஸ் ஆக இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் நன்றாக அமைந்திருப்பதும் தான் காரணமாம்.

மேலும் விக்ரமுக்கு சமீபத்தில் வெற்றி படமாக அமைந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படி பொன்னியின் செல்வன் துருவ நட்சத்திரம் தங்கலான் என அவரது அடுத்தடுத்த படங்களின் மீதுள்ள நம்பிக்கையால் முன்னதாகவே பிளான் போட்டு சம்பளத்தை உயர்த்தி விட்டார் நடிகர் விக்ரம்.

Also Read: 19ஆம் நூற்றாண்டின் சொல்லப்படாத வரலாறு.. விக்ரமின் நடிப்பை பற்றி ஓப்பனாக பேசிய பா ரஞ்சித்

- Advertisement -

Trending News