அடிமேல் அடிவாங்கும் விக்ரம் பிரபு.. சன் பிக்சர்ஸின் இந்த பிரம்மாண்ட யுக்தி கை கொடுக்குமா.?

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமாகி, தற்போது நம்பத்தக்க கதாநாயகனாக மாறி இருப்பவர்தான் நடிகர் விக்ரம் பிரபு. இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முத்தையா இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில், ‘புலிகுத்தி பாண்டி’ என்ற திரைப்படம் தயாராகியிருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் விக்ரம்பிரபு நடிப்பில் தயாராகி இருக்கும் ‘புலிகுத்தி பாண்டி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையன்று நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது கொரோனா பேரிடர் காரணமாக, பல திரைப்படங்கள் தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக OTT தளங்களில் வெளியிடப்பட்டன. இதனால் தற்போது தியேட்டர்கள்  திறக்கப்பட்டு இருந்தாலும், மக்கள் அவற்றை நாடிச் செல்வதில்லை.

ஆகையால் தற்போது வரை சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே தியேட்டர்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பெரிய பட்ஜெட் படங்களான மாஸ்டர், ஈஸ்வரன் போன்ற திரைப்படங்கள் பொங்கலன்று தியேட்டரில் வெளியாக உள்ளன.

ஏற்கனவே வரிசையாக தோல்விகளை சந்தித்து வரும் விக்ரம் பிரபுவுக்கு சினிமாவில் ஒரு சறுக்கல் தான். மீண்டும் அவர் எழுந்து வருவதற்கு பொன்னி செல்வன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இப்படியிருக்க, விக்ரம் பிரபு நடிப்பில் தயாராகியிருக்கும் ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இந்த படம் OTT தளத்திலும் வெளியாக உள்ளதாம்.

ஏற்கனவே பிரசன்னா, யோகிபாபு நடித்த ‘நாங்க ரொம்ப பிஸி’ திரைப்படமும் தீபாவளி அன்று நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது.

pulikkuthi-pandi-firstlook
pulikkuthi-pandi

எனவே, இவ்வாறு புது புது படங்கள் எல்லாம் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட உள்ள தகவல்கள்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்