மீசையில்லாமல் விறைப்பான போலீஸ்காரராக நிற்கும் விக்ரம் பிரபு.. டாணாக்காரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சில வாரிசு நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால் அதை தக்கவைத்துக் கொள்கிறார்களா என்றால் கேள்விக்குறி தான். குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டுமே அதில் கோலோச்சியுள்ளனர்.

இதில் அந்தப் பக்கமும் இல்லாமல் இந்தப் பக்கமும் இல்லாமல் மதில்மேல் பூனையாக மாட்டிக்கொண்டு முழிப்பவர்தான் விக்ரம் பிரபு. ஆரம்பத்தில் கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தார்.

ஆனால் அதன்பிறகு தொட்டதெல்லாம் தோல்வி தான். கடைசியாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான பதிமூன்று படங்களில் புலிகுத்தி பாண்டி படம் மட்டுமே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவும் நேரடியாக சன் டிவியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்பதற்காக தற்போது டாணாக்காரன் எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் பஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மீசையில்லாமல் விறைப்பாக நிற்கும் விக்ரம் பிரபுவின் டாணாக்காரன் திரைப்படம் கண்டிப்பாக அவருக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம். இந்த படம் மட்டும் அவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை என்றால் அவருடைய மார்க்கெட்டுக்கு திண்டாட்டம் தான் இருக்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

tanaakaran-firstlook
tanaakaran-firstlook

சிவாஜி கணேசன், பிரபு ஆகியோர் வரிசையில் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிப்பார் என அவரது குடும்பமே எதிர்பார்த்திருக்கும் நிலையில் விக்ரம் பிரபுவுக்கு அடி மேல் அடி விழுவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்