ஃபெயிலியர் ஹீரோயின் முத்திரை குத்த பட்ட நடிகை.. 4 வருடம் கழித்து களத்தில் இறங்கும் தேவசேனா

Vikram Prabhu and Anushka’s joining Ghaati movie: தென்னிந்தியாவின் அழகு பதுமை அனுஷ்கா ஷெட்டி பாகுபலி மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். சர்ச்சையான கதைகளையும் துணிச்சலாக கையில் எடுக்கும் அனுஷ்காவிற்கு சமீப காலமாக எந்த ஒரு படமும் சரியாக  போகாததால் பெயிலியர் ஹீரோயின் என முத்திரை குத்தப்பட்டார். 

பாகுபலியின் வெற்றிக்கு பின் திரை துறையை விட்டு ஒதுங்கி இருந்தார், 2020 ல் சைலன்ஸ் என்கின்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த வருடம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்தது ஆறுதல் வெற்றியை தந்தாலும் அவரது திறமைக்கு தீனி போடுவதாக இல்லை. 

தமிழ்,தெலுங்கு திரை உலகை விட்டு சற்று விலகி இருந்தாலும், அனுஷ்காவை மலையாள சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.  பிரம்மாண்ட பொருட்செலவில் ஜெயசூர்யாவுடன் ஹாரர் கதையில்  மலையாளத்தில் கமிட் ஆகியுள்ளார் அனுஷ்கா. 

இவை தவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யுடன் GOAT படத்தில் ஒரு பாடலுக்கு  குத்தாட்டம் போடுவதற்காக வந்த வாய்ப்பை சூசகமாக மறுத்துவிட்டார் இந்த இஞ்சி இடுப்பழகி. இவர் மறுத்ததை அடுத்து, வாய்ப்பு திரிஷாவிற்கு சென்றது வேறு கதை. 

தேவசேனாவின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று ரசிகர்கள் கவலையோடு இருக்க கம்பேக் கொடுக்கிற மாதிரி, கிரிஷ் இயக்கத்தில் யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் காதி என்கின்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனுஷ்கா. 

போராளியாக விக்ரம் பிரபு உடன் கை கோர்க்கும் அனுஷ்கா

பாகுபலிக்கு பின் இத்திரைப்படத்தில் அனுஷ்காவுடன் ரம்யா கிருஷ்ணனும் இணைய உள்ளார். சமீபத்தில் வெளியான இதன் ஃபர்ஸ்ட் லுக்கில்  கம்பீரத்துடன் கூடிய ஆக்ரோஷமான போராளி வேடத்தில் தோன்றியுள்ளார் அனுஷ்கா. 

காதி திரைப்படத்தில் அனுஷ்காவிற்கு தான் அதிக முக்கியத்துவம்  என்று தெரிந்த போதும் நட்பு ரீதியில் தனது கேரக்டர், கதையில் முக்கிய திருப்பத்தை உண்டாக்கும் என்ற நோக்கில் அனுஷ்காவுடன் இணைந்துள்ளார் விக்ரம் பிரபு

இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரேம்  கைப்பற்றியுள்ளது. பழி வாங்கும் படலத்துடன் ஆக்ரோஷமாக களம் இறங்கும் அனுஷ்கா, காதி தன்னுடைய திரை வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை தரும் என்று நம்பிக்கையில்  உள்ளார். 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்