ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நாட்டாமையிடம் சென்ற பஞ்சாயத்து.. உறவுக்காரரான விக்ரமுக்கு என்ன தீர்ப்போ!

நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா படத்தின் ரிலீசை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். இதோ அதோ என்று தள்ளிப் போய்க் கொண்டிருந்த கோப்ரா படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆகப்போகிறது. இதை அடுத்து அவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் விக்ரம் நடிப்பில் பல நாட்களாக நிலுவையில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு ஒரு விடிவு காலம் வர இருக்கிறது. பல வருடங்களாகவே விக்ரம் மீது ஒரு பெரிய பஞ்சாயத்து இருக்கிறது. அவரால்தான் துருவ நட்சத்திரம் படம் இழுத்துக் கொண்டு போவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

தற்போது இந்த பிரச்சனையை உதயநிதி ஸ்டாலின் பஞ்சாயத்து செய்ய இருக்கிறாராம். ஏனென்றால் அவருடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் இந்த படத்தை ரிலீஸ் பண்ண இருக்கிறதாம். அந்த வகையில் அவர் இந்த பட பிரச்சனை குறித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.

இருப்பினும் விக்ரமுக்கு சாதகமாக உதயநிதி ஸ்டாலின் பேசுவார் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது. ஏனென்றால் விக்ரமின் மகள் கலைஞர் கருணாநிதியின் கொள்ளுப்பேரணை தான் திருமணம் செய்திருக்கிறார். அந்த வகையில் கலைஞர் குடும்பம் விக்ரமுக்கு நெருங்கிய உறவுக்காரர்கள்.

இதனால் சொந்தக்காரரான விக்ரமுக்கு சாதகமாக உதயநிதி ஸ்டாலின் பேச வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் துருவ நட்சத்திரம் படத்திற்கு ஒரு சுமுகமான முடிவு கிடைத்தால் போதும் என்று படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் எதிர்பார்க்கிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தில் ரீது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் சில பிரச்சனைகளின் காரணமாக கிடப்பிலேயே போடப்பட்டது. தற்போது இந்த திரைப்படம் மீண்டும் தூசி தட்ட இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

- Advertisement -

Trending News