ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பொளந்து கட்டிய ஆண்டவர்.. விக்ரம் பஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கு?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் கமலின் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக விக்ரம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அனிருத் இசையில் பத்தல பத்தல என்று தொடங்கும் இந்த பாடலை கமல்ஹாசனே எழுதி, பாடியிருக்கிறார். சாண்டி மாஸ்டர் இதற்கு நடனம் அமைத்துள்ளார்.

பொதுவாகவே கமல் சென்னை பாஷையை பேசுவதில் கில்லாடி. அதிலும் அந்த பாஷையில் அவர் பாடிய ஆழ்வார்பேட்டை ஆண்டவா போன்ற பல பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் ரசிக்க வைக்கும். அந்த வரிசையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் பாடல் கமல் ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு அவர் பாடுவதாலோ, என்னவோ அவருடைய குரலில் ஒரு துள்ளலும், மகிழ்ச்சியும் தெரிகிறது. அதிலும் கமல் அவரின் பார்வையில் இன்றைய அரசியலும், சமூகமும் எப்படி இருக்கிறது என்பதை பாடல் வரிகளில் தர லோக்கலாக பொளந்து கட்டியிருக்கிறார்.

மேலும் கொரோனா காலகட்டத்தில் நம் நாட்டில் நடந்ததை நினைவு கூறும் வகையில் கஜானாவில் காசு இல்லை, கல்லாவிழும் காசில்லை, ஒன்றியத்தின் தப்பாலே ஒன்றும் இல்லை இப்பாலே, சாவி இப்போ திருடன் கையிலே போன்ற வார்த்தைகளுக்கு தியேட்டரில் நிச்சயம் விசில் பறக்கும்.

அந்த வகையில் கமல் இறங்கி ஆட்டம் போட்டு இருக்கும் இந்தப் பாடல் தற்போது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. இதிலிருந்தே கமலுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு நல்ல கம்பேக் ஆக இருக்கும் என்று தெரிகிறது. ரசிகர்களின் பல வருட காத்திருப்பை வீணாக்காமல் ஆண்டவர் இந்த படத்தின் மூலம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுக்க போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்