மாரி செல்வராஜ் வீட்டுக்கே சென்று பாராட்டிய முன்னணி நடிகர்.. அதுலயும் ஒரு சுயநலம் இருக்கு!

கர்ணன் படம் வெளியானதிலிருந்து எங்கு திரும்பினாலும் மாரி செல்வராஜ் பெயர்தான் அடிபடுகிறது. கர்ணன் படத்தை தமிழ்நாடே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருவது போன்ற செய்திகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன.

கர்ணன் படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு உடனடியாக அட்வான்ஸ் கொடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் உடன் ஒரு படம் எடுத்தே ஆக வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறாராம் கலைப்புலி எஸ் தாணு.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்களும் நடிகைகளும் கர்ணன் படத்தை பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம் நேரடியாக மாரி செல்வராஜ் வீட்டிற்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் ஒரு சுயநலம் இருக்கிறது என்று குறிப்பிட்டோமல்லவா. அடுத்ததாக மாரி செல்வராஜ் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாற்றை எடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ணன் படத்தின் வெற்றியை பார்த்து பூரித்துப் போன விக்ரம் கண்டிப்பாக துருவ் விக்ரமுக்கும் ஒரு நல்ல படத்தைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் மாரி செல்வராஜை அநியாயத்திற்கு தாங்குகிறாராம்.

இப்போதைக்கு கோலிவுட் வட்டாரங்களில் மாரி செல்வராஜுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் கலைப்புலி எஸ் தாணு மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் சூர்யாவுடன் ஒரு படம் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

vikram-met-maari-selvaraj-for-karnan-success
vikram-met-maari-selvaraj-for-karnan-success
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்