ஒரு தாடிக்காக மணிரத்னம் பட வாய்ப்பை தவறவிட்ட விக்ரம்.. சூப்பர் ஹிட் படமாச்சே!

தமிழ் சினிமாவில் நடிப்புக்காக தன்னையே அர்ப்பணிக்கும் ஒரு நடிகர் என்றால் அது விக்ரம் மட்டும்தான். அந்நியன், ஐ போன்ற படங்களுக்காக தனது உடலமைப்பை மாற்றி கடினமாக உழைத்து இருந்தார். இது மட்டுமின்றி ஆரம்ப காலங்களில் அவர் நடிப்பில் வெளியான சேது, காசி போன்ற படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன.

நடிகர் விக்ரம் 1995ஆம் ஆண்டே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். ஆனால், 1999ஆம் ஆண்டுக்கு பிறகு தான் அவரது முகம் அனைவருக்கும் தெரியவந்தது. இதற்கு காரணம் சேது படம் தான். இப்படத்திற்கு பின்னர் அனைவரின் கவனமும் விக்ரம் பக்கம் திரும்பியது.

அதன் பின்னர் விக்ரம் நடித்த அனைத்து படங்களும் வரிசையாக வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறினார். தற்போது கோலிவுட்டின் முன்னணி இயக்குனரின் படங்களில் விக்ரம் நடித்து வருகிறார்.

chiyaan-vikram
chiyaan-vikram

இந்நிலையில் தற்போது விக்ரம் குறித்த செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் பம்பாய். இப்படத்தில் கதாநாயகனாக முதலில் நடிக்க இருந்தது நடிகர் விக்ரம் தான். இவர்தான் முதலில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த சமயத்தில் விக்ரம் புதியமன்னர்கள் படத்தில் நடிக்க தாடி வளர்த்து வந்தார். ஆனால் பம்பாய் படத்தில் நடிக்க தாடியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, தாடியை எடுக்க மறுத்ததால், பம்பாய் படத்தில் விக்ரமால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். ஒருவேளை இப்படத்தில் விக்ரம் நடித்து இருந்தால் 1995ஆம் ஆண்டே அவர் பிரபலமாகிருப்பார் போல.