ஜெயம் ரவியின் ஹிட் இயக்குனரை தன் பக்கம் இழுக்க விக்ரம்.. தனக்கும் ஹிட்டு வேணுமாம்!

சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் பலரும் இளம் இயக்குனர்களை குறிவைத்து அவர்களுக்கு மிகப் பெரிய சம்பளம் பேசி எப்படியாவது தங்கள் வசம் வைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் அமைந்ததை போல அஜித்துக்கு வினோத் அமைந்துள்ளார்.

அதேபோல் தமிழ் சினிமாவில் பல வருடமாக முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். ஆனால் கடந்த சில வருடங்களாக இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றிப் படம் எதுவும் இல்லை.

அந்த வகையில் அடுத்ததாக அஜய் ஞானமுத்து இயக்கிவரும் கோப்ரா படத்தை பெரிதும் நம்பியுள்ளார். 7 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சீயான் 60 படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடைய உள்ளதாம். இந்த இரண்டு படங்களில் சீயான் 60 படமே முதலில் வெளியாகும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இது ஒருபுறமிருக்க அடுத்ததாக சீயான் விக்ரம், ஜெயம் ரவிக்கு கோமாளி என்ற வெற்றி படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு வாய்ப்பு கொடுக்கவுள்ளாராம். ஜெயம் ரவிக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகப்பெரிய வசூல் குவித்த படமாகவும் கோமாளி திரைப்படம் அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு 90ஸ் கிட்ஸ்தான் காரணம்.

இந்நிலையில் அடுத்ததாக விக்ரம் நடிக்கும் புதிய படத்தை பிரதீப் இயக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என கோலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி வெளி வேகமாக பரவிய நிலையில், விக்ரம் தரப்பிலிருந்து இது பொய்யென்றே கூறுகின்றனர்.

vikram-cinemapettai-01
vikram-cinemapettai-01