பொன்னியின் செல்வன் படத்திலிருந்து லீக்கான படப்பிடிப்பு காட்சிகள்.. அப்செட்டில் மணிரத்னம்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலையே இயக்குனர் மணிரத்னம் படமாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இப்படத்தில், நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

ponniyin-selvan-cinemapettai-03
ponniyin-selvan-cinemapettai-03

இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இச்சம்பவம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், பொன்னியின் செல்வன் நாவலில் எழுதியுள்ளது போன்று ஓவியங்கள் இப்படத்தில் தத்ரூபமாக இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படத்தின் காட்சிகள் லீக்கானதால் இயக்குனர் மணிரத்னம் அப்செட்டில் உள்ளார்.

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -