அஜித் பட ஃபார்முலாவை ஃபாலோ பண்ணும் விக்ரம்.. சத்தமில்லாமல் ஜெயிக்க வரும் வீர தீர சூரன்

Vikram follows Ajith’s formula and comeback to vikram: தமிழ் திரையுலகில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் விடாமல் போராடுபவர் தான் சியான் விக்ரம். 

கலைக்கென பல  சாகசங்களை அசராமல் செய்யும் இந்த அசகாய சூரனின், சமீபத்திய படங்கள் பொன்னியின் செல்வனைத் தவிர, சிலவை ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாமல் போயின.

இருந்த போதும் தனது முயற்சியில் துவளாமல் துருவ நட்சத்திரம், தங்கலான் போன்ற பல படங்களை கைவைசம் வைத்துக்கொண்டு கெத்தாக இருக்கிறார் சியான் விக்ரம்.

படங்கள்  கை கொடுக்காத போனாலும் ரசிகர்கள் இவர் மீது வைத்த அன்பை மட்டும் என்றும் குறைத்ததில்லை.  மீண்டும் தரமான படங்களை தருவார் என்ற நம்பிக்கையில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தின் இறுதி கட்டத்தை முடித்துள்ள, சியான், அடுத்ததாக வீர தீர சூரன் படத்தில் எஸ் யூ அருண்குமார் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

முதலில் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்யும் வீரதீர சூரன்

சமீபத்தில் விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி வீர தீர சூரன் படத்தின் போஸ்டரை வெளியிட்டது. மேலும் வீர தீர சூரன் பாகம் 2 என்று குறிப்பிடப்பட்டு  டீசர் காட்சிகள் வெளியிடப்பட்டன.

அதாவது தற்போது வெளியாக உள்ளது வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம், இதற்கு அடுத்தபடியாக முதல் பாகத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளனர் படக் குழுவினர்.

அஜித் நடித்த பில்லா படத்தை இவ்வாறு தான் ரிலீஸ் செய்தார் அதாவது பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தை முதலில் ரிலீஸ் செய்தும் முதல் பாகத்தை  அடுத்ததாக ரிலீசாக செய்து மாபெரும் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதே ஃபார்முலாவை தான் தனது வீர தீர சூரன்படத்தில் பயன்படுத்தி உள்ளார்  விக்ரம் . படத்தின் டீசரிலேயே மஞ்சள் நிற விளக்கோளியில் விறுவிறுப்பை உண்டாக்கி ஆக்ஷனில் தெறிக்க விட்டிருந்தார் இயக்குனர்.

மூன்று நிமிட காட்சியை பார்த்தபோது படத்தை எப்போது காணலாம் என்கின்ற பரபரப்பை, ஆர்வத்தை தொற்றிக் கொள்ள வைத்துள்ளது.  

அருண்குமார் இயக்கம் என்றாலே சமூக சீர்திருத்த கருத்துகளுக்கும் வித்தியாசமான ஆக்சனுக்கும் குறைவில்லாமல் கொடுப்பார் என்பது நம்பிக்கையான ஒன்று. அவருடன் சியான் விக்ரம் இணைந்தது மேலும் பரபரப்பை அதிகரித்து உள்ளது.

இதன்படி ஃபர்ஸ்ட் வீர தீர சூரன் செகண்ட் பார்ட் தான் ரிலீஸ் ஆகிறதாம். ரெண்டு மாசம் கழித்து ஃபர்ஸ்ட் பாட் வருகிறது.

மொத்தமாக படப்பிடிப்புக்கு 100 நாட்கள் எடுத்து இரண்டாம் பாகத்தை  முடித்து ரிலீஸ் செய்த பின்பு முதல் பாகத்திற்கான வேலைகளை துவங்க உள்ளதாக தகவல். அஜித்தின் பில்லா படமும் இதே பார்முலாவில் தான் தயார் செய்ய பட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்