விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் கோப்ரா திரைப்படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காக விக்ரம் அதிக ரிஸ்க் எடுத்து பல கெட்டப்புகளை போட்டுள்ளார். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு தற்போது பெரிய ஆபத்து வந்துள்ளது. அதாவது இந்த படம் வெளியான மறுவாரம் மூன்று இளம் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகிறது. அதாவது செப்டம்பர் 15 அன்று சிம்புவின் வெந்து தணிந்தது காடு, ஜெயம் ரவியின் அகிலன், விஷாலின் லத்தி ஆகிய திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.
இந்த படங்கள் அனைத்துமே ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் இந்த படங்கள் வெளிவரும் பட்சத்தில் கோப்ரா திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறது.
எப்படி என்றால் கோப்ரா திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் குறைந்தது பத்து பதினைந்து நாட்கள் இந்த படம் தியேட்டரில் ஓடினால் தான் வசூல் லாபம் பார்க்க முடியும். அதன் மூலம் படத்துக்கான செலவையும் ஈடு கட்ட முடியும்.
இந்த சூழலில் இப்படி மூன்று திரைப்படங்கள் வெளியானால் கோபுர திரைப்படத்தை தியேட்டரில் இருந்து தூக்கி விடுவார்கள். அதனால் அந்த படத்தின் வசூலிலும் பாதிப்பு ஏற்படும். இதனால் விக்ரம் உட்பட பட குழு தற்போது தீவிர சிந்தனையில் இருக்கிறார்களாம்.
ஏற்கனவே நடிகர் விக்ரம் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நல பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போதே அவருக்கு நெஞ்சுவலி என்ற வதந்தி பரவி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் கோப்ரா படத்தை பெரிதும் நம்பி இருக்கும் விக்ரமுக்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் விக்ரமிற்கு இப்ப உண்மையாகவே நெஞ்சுவலி வந்துவிடும் என்ற ரீதியில் கலாய்த்து வருகின்றனர்.