ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பொன்னியின் செல்வனை புறக்கணிக்க போட்ட டிராமா.. விக்ரமின் கோபத்திற்கு காரணம் இதுதான்

கடந்த சில நாட்களாகவே நடிகர் விக்ரம் பற்றிய பல செய்திகள் ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆதித்த கரிகாலனாக மிரட்டி இருக்கும் விக்ரமின் பொன்னியின் செல்வன் படத்தைக் காண அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்பு நடந்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரமை காண்பதற்கும் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அன்று மருத்துவமனையில் விக்ரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு மாரடைப்பு என்று பல செய்திகள் வெளிவந்து ரசிகர்களை பதறச் செய்தது.

ஆனால் அவருக்கு மாரடைப்பு போன்ற எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்தனர். அதன் பிறகு சில நாட்களிலேயே வீடு திரும்பிய விக்ரம் தற்போது அவரின் நடிப்பில் வெளியாக இருக்கும் கோப்ரா பட விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் உரையாடினார்.

இந்த விஷயம் தான் தற்போது பெரும் விவாதத்திற்கு ஆளாகியுள்ளது. கோப்ரா பட விழாவில் விக்ரம் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார். அப்படி இருக்கும் போது அவர் எதற்காக பொன்னியின் செல்வன் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பின்னணியில் விக்ரமுக்கும் படகுழுவினருக்கும் இடையில் இருந்த மனஸ்தாபம் தான் காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது அந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல நடிகர் விக்ரமை மதிக்காமல் நடந்து கொண்டாராம். இதுதான் தற்போது பிரச்சனை என்று கூறுகின்றனர்.

அதனால் தான் விக்ரம் இந்த விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். அதன் பிறகு தான் இப்படி ஒரு புரளியை அவர்கள் கிளப்பி விட்டுள்ளார்கள். அதாவது விழாவுக்கு முந்தைய நாளே மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்த போதும் விழா தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தகவலை கசிய விட்டதற்கான காரணமும் அதுதான்.

மேலும் இயக்குனர் மணிரத்தினம் விக்ரமிற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் கொடுக்காமல் மற்றொரு நடிகரை முன்னிலைப்படுத்தியதும் அவரை அதிக கோபம் கொள்ள வைத்திருக்கிறது. இது எல்லாம் சேர்ந்துதான் அவரை டீசர் விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுக்க வைத்தது. தற்போது இந்த செய்தி தான் திரையுலகில் கடும் விவாதமாக மாறி இருக்கிறது.

- Advertisement -

Trending News