விக்ரம் படத்துக்கும் விஸ்வரூபம் படத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை.. முரட்டு சம்பவம் செய்யப்போகும் லோகேஷ் கனகராஜ்

இந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான வாரமாக அமைந்துவிட்டது. அனைத்து முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்த படங்களுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிட்டு ரசிகர்களை மொத்தமாக குஷிபடுத்தியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த சனிக்கிழமை கமலஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மரண மாஸ் காட்டியது.

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் நடிக்கின்றனர். நடிப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் மூன்று நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் code red என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கும். இந்த வார்த்தையை ஏற்கனவே கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்றிருப்பது பலருக்கும் தெரியாது.

code red என்றால் நான் செத்து விட்டேன் என்று அர்த்தம் என ஹீரோயினிடம் தூது சொல்லி விடுவார் கமல். தற்போது அந்த வார்த்தையை விக்ரம் படத்தில் பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஏற்கனவே விக்ரம் படம் திரில்லர் கதையம்சத்தில் இருக்குமா என ரசிகர்கள் யோசித்து வரும் நிலையில் இது மேலும் யோசிக்க வைத்துள்ளது.

vikram-first-look-decoded
vikram-first-look-decoded

ஆக மொத்தத்தில் விக்ரம் படம் கமலின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து அவரது மார்க்கெட்டை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -