கொடூர வில்லனாக உப்பன்னான்னு ஒரே ஒரு படம்.. தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் விஜய் சேதுபதியின் சம்பளம்

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியின் கேரியர் உச்சத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மற்ற மொழிகளிலிருந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட எட்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. அதனைத் தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹீரோவாக மட்டுமல்லாமல் தற்போது மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாத பவானி கதாபாத்திரத்திற்கு பிறகு தெலுங்கில் ராயணம் என்ற பெயரில் விஜய் சேதுபதி கொடூர வில்லனாக நடித்த உப்பன்னா படமும் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் விஜய்சேதுபதியின் கேரியர் இரண்டு மடங்கு வேகமாக சென்று கொண்டிருக்கிறதாம்.

vijaysethupathi-cinemapettai-01
vijaysethupathi-cinemapettai-01

அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் தங்களுடைய படங்களில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க போட்டி போடுகிறார்களாம். ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம். சமீபத்தில்கூட சிரஞ்சீவி விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தை புகழ்ந்து தள்ளினார் என்பதும் கூடுதல் தகவல்.

அதுமட்டுமில்லாமல் ஒரே நேரத்தில் பாலிவுட்டிலும் மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனுஸுக்கு பிறகு அடுத்ததாக இந்திய சினிமாவே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ் நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார் விஜய் சேதுபதி.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்