22 வயது மிஸ் இந்திய அழகியை வளைத்துப் போட்ட விஜய் சேதுபதி.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் பொன்ராம் படம்

ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் கிட்டத்தட்ட 10 படங்கள் ரிலீஸுக்கு ரெடி ஆக உள்ள நிலையில் அடுத்ததாக தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பொன்ராம் இயக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்களுக்கும் குலதெய்வக் கோயில் போல் விளங்கி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் படம் தயாரிக்கும் நிறுவனம் என்றால் அது சன் பிக்சர்ஸ் தான்.

அந்த வகையில் அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் பொன்ராம் கூட்டணியில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மிஸ் இந்தியா அழகி அனு கீர்த்தி வாஸ் நடிக்க உள்ளாராம்.

பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் பொன்ராமின் ஆஸ்தான நடிகர்கள் பலரும் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் முக்கிய காமெடியனாக நடிக்க உள்ளாராம்.

vjs46-cinemapettai
vjs46-cinemapettai

சமீப காலமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோக்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

anukeerthy-vas-cinemapettai
anukeerthy-vas-cinemapettai

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அதற்கென்று இப்படியா என கோலிவுட் வட்டாரமே ஆச்சரியப்படும் அளவுக்கு மாதாமாதம் புதிய புதிய படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஒப்பந்தமாகி வருகிறார் விஜய் சேதுபதி.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டியதுதான்!

- Advertisement -