இயக்குனர் பொன்ராமிடம் தப்பித்த விஜய் சேதுபதி.. ஆனா வசமா மாட்டினது ஒரு பச்சக் குழந்தை நடிகர்

இயக்குனர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்ற இரண்டு ஹிட் படத்தை கொடுத்தார். ஆனால் அவர் நேரமோ என்னமோ அவர் மேல் சில எதிர்பார்ப்புகளும் வந்து விழுந்தது. ஆனால் அதை சுமக்க முடியாமல் தள்ளாடி வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதியிடம் பொன்ராம் ஒரு கதையை கூறியிருக்கிறார். ஏற்கனவே டிஎஸ்பி படத்தில் நான் பட்ட அவஸ்தை போதும் என ஒதுங்கி விட்டார் மனுஷன். பின்பு சிவகார்த்திகேயனிடம் சென்றார். வாழ்க்கையிலேயே சிவகார்த்திகேயன் அப்படி ஒரு தோல்வி படத்தை கொடுத்ததே இல்லை அப்படி ஒரு சம்பவம் சீமராஜாவில் நடந்தது.

இரண்டு ஹிட் படத்தை பொன்ராம் கொடுத்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கு அடுத்து வெளியான மூன்று படங்களும் தமிழ் சினிமாவிலேயே யாரும் கொடுக்காத அளவு மிகப்பெரிய தோல்வி படத்தை கொடுத்தார். இதற்கு மேலும் ஒரு படத்தை மோசமாக எடுக்க முடியாது என்ற பெயரும் எடுத்தார்.

வசமா சிக்கிய நடிகர்

எல்லா நடிகர்களும் சுதாரித்துக் கொண்டதால் தலைவர் நேராக புரட்சிக் கலைஞர் மகன் சண்முக பாண்டியனை சந்தித்தார். அவரிடம் தன் கதையை கூறியிருக்கிறார். சண்முக பாண்டியனுக்கு கதையெல்லாம் தேவையில்லை ஒரு வாய்ப்பு மட்டும் தான்.

அதனால் எந்த கதையோ என்ன கருமமோ எடுங்கள் என்று நான் நடிக்கிறேன் என்று கூறி ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால் ஒரே ஒரு உத்தரவு மட்டும் போட்டு இருக்கிறார் சண்முக பாண்டியன்.

அப்பா புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பெயரை என்னால் கெட்டுப்போகாத அளவு மட்டும் படத்தை எடுத்துக் கொடுக்குமாறு கேட்டு இருக்கிறார்.

சங்கரா சங்கரா என்றால் வாயில் சாதம் வந்து விழுமா என்ன? ஒரு நல்ல முயற்சி செய்து நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக எடுக்கலாம். அதை விட்டுட்டு ஹீரோக்களை மட்டும் மாற்றிக் கொண்டிருந்தால் போதாது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்